நான் தூசு இல்ல இன்னும் மாஸ் தான்: கெத்து காட்டும் 'நேசமணி' வடிவேலு
Recommended Video
சென்னை: நான் இன்னும் மாஸ் தான் என்று வடிவேலு பேசிய வீடியோவை நெட்டிசன்கள் அதிக அளவில் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
வைகைப்புயல் வடிவேலு படங்களில் நடிக்காமல் இருந்தாலும் மக்கள் அவரை மறக்கவே இல்லை. நேசமணி என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய மற்றும் உலக அளவில் டிரெண்டாகியுள்ளது.

யாருய்யா அந்த நேசமணி, தமிழர்கள் ஏன் அவருக்காக பிரார்த்தனை செய்கிறீர்கள், ஏதாச்சும் சொல்லுங்கய்யா, ஒன்னுமே புரியவில்லை என்று பிற மாநில மக்களும், வெளிநாட்டுக்காரர்களும் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள். கூகுளில் Who is n என்று டைப் செய்தால் முதலில் வருவது Who is Nesmani என்பது தான். அந்த அளவுக்கு நேசமணி உலக மக்களின் கவனத்தை ஈர்த்துவிட்டார்.
நேசமணிக்கு தமிழக அரசு வேலை தர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பல ஆண்டுகளுக்கு முன்பு வடிவேலு நடித்த கதாபாத்திரத்தை வைத்து இன்று ட்விட்டரில் மோடியை தோற்கடித்துவிட்டார்கள் தமிழக மக்கள். ட்விட்டர் டிரெண்டில் மோடியை முந்திக் கொண்டுவிட்டார் நேசமணி. தொடர்ந்து முன்னிலையில் இருப்பதும் நேசமணியே.
நேசமணி டிரெண்டாகி வரும் நிலையில் வடிவேலு முன்பு பேசிய வீடியோ ஒன்றையும் நெட்டிசன்கள் ஷேர் செய்து வருகிறார்கள். அந்த வீடியோவில் வடிவேலு கூறியிருப்பதாவது,
ஒவ்வொரு குடும்பத்திலும் உங்களின் ரேஷன் கார்டில் நான் இல்லையே தவிர அவுக வீட்டிற்குள் என்னை ஒரு ஆளாக வைத்துள்ளார்கள். ஆண்டவன் புண்ணியத்தால் நம் மாஸ் அப்படியேத் தான் உள்ளது. என் சீட்டு காலியாகத் தான் கிடக்கிறது. அது என் சீட்டு அதுபாட்டுக்கு இருக்கு. நான் அப்பப்போ உட்கார்ந்து உட்கார்ந்து வந்துக்கிட்டு இருக்கிறேன்.
அந்த சீட்டை யாரும் தூக்கிட்டுப் போக முடியாது. அப்படியே தூக்கிட்டுப் போனால் சந்தோஷம் தான். தூக்கிட்டுப் போகிறார்கள், ஆனால் சீட்டில் உட்கார முடியாது. இதை நான் திமிராக சொல்லவில்லை. மக்கள் மத்தியில் நான் இன்னும் தூசு ஆகவில்லை, மாஸ் தான் என்கிறார்.
நேசமணிக்காக திரையுலக பிரபலங்களும் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள். மேலும் தங்களின் பெயருக்கு முன்பு கான்டிராக்டர் என்ற வார்த்தையையும் ட்விட்டரில் சேர்த்துள்ளனர். இந்நிலையில் பிக் பாஸ் பிரபலம் காயத்ரி ரகுராம் மட்டும் உயிரே இல்லா ஒரு கதாபாத்திரமான நேசமணியை டிரெண்டாக்குவதை பார்த்துவிட்டு தமிழக மக்களை விளாசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











