பிக் பாஸ் வீட்டில் சுஜா வருணி சொன்ன அத்தான் நான் தான்: சிவாஜி பேரன் விளக்கம்

By Siva

Recommended Video

சிவாஜி பேரனை காதலிக்கும் சுஜா வருணி- வீடியோ

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது சுஜா வருணி கூறிய அத்தான் நான் தான் என்று சிவாஜி கணேசனின் பேரன் சிவாஜி தேவ் தெரிவித்துள்ளார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமாரின் மகன் சிவாஜி தேவ். சில படங்களில் நடித்துள்ள அவரும், பிக் பாஸ் பிரபலம் சுஜா வருணியும் காதலிப்பதாகவும், நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

அவர்கள் திருப்பதி கோவிலில் ஜோடியாக எடுத்துக் கொண்ட புகைப்படமும் வெளியானது. ஆனால் நிச்சயம் நடக்கவில்லை என்று சுஜா மறுத்தார்.

சிவக்குமார்

சிவாஜி தேவ் சுஜா வருணியுடனான உறவு குறித்து ட்விட்டரில் புகைப்படத்துடன் விளக்கம் அளித்துள்ளர். நான் சுஜா வருணியை 11 ஆண்டுகளாக காதலித்து வருகிறேன். என் இயற்பெயர் சிவக்குமார் என்று ட்வீட்டியுள்ளார்.

பெயர்

என் அம்மா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவரின் ஆசியுடன் என் பெயரை சிவாஜி தேவில் இருந்து சிவக்குமாராக மாற்றிக் கொண்டேன். இனி இந்த பெயருடன் தான் திரைப்பயணத்தை தொடர்வேன். பிக் பாஸ் வீட்டில் அவர் பேசிய அத்தான் நான் தான் என்று விளக்கம் அளித்துள்ளார் சிவக்குமார்.

திருமணம்

எங்களின் திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன். அதுவரை இது குறித்து அமைதி காக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். நன்றி என்று ட்வீட்டியுள்ளார் சிவக்குமார்.

சுஜா வருணி

இது சிவாஜி பேரனின் ட்விட்டர் கணக்கு தானா என்று சந்தேகப்பட வேண்டாம். சிவக்குமார் கூறியது உண்மை என்று சுஜா வருணியே கமெண்ட் போட்டு உறுதிப்படுத்திவிட்டார். மேலும் சிவக்குமாரின் 3 ட்வீட்டுகளையுமே ரீட்வீட் செய்துள்ளார்.

வாழ்த்துக்கள்

சிவக்குமாரின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்கள், சீக்கிரமாக திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X