Exclusive : “மக்களோட வெறுப்பை சம்பாதிக்கணும்”.. வில்லன் நடிகர் ரகு ஆதித்யாவின் பக்கா பிளான்!

மக்களின் வெறுப்பை சம்பாதித்தால் தான் சினிமாவில் நீடிக்க முடியும் என்கிறார் நடிகர் ரகு ஆதித்யா.

சென்னை: வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பது தான் தனது ஆசை என வில்லன் நடிகர் ரகு ஆதித்யா தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் சீமராஜா, விஜய் சேதுபதியின் தர்மதுரை என நிறைய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் ரகு ஆதித்யா.

இவர் வில்லனாக நடித்துள்ள தேவராட்டம் படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் ரகு ஆதித்யா மோசமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதனால் தனது கதாபாத்திரன் மீது மக்களுக்கு வெறுப்பு தான் ஏற்பட்டுள்ளது என்கிறார் ரகு. இது குறித்து அவர் நம்மிடம் கூறியதாவது,

தேவராட்டம்:

தேவராட்டம்:

"முத்தையா சாருடன் மருது படத்திலேயே நான் வேலை பார்ப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அது நடக்காமல் போய்விட்டது. இந்நிலையில் தேவராட்டம் படத்தில் நடிக்க முத்தையா என்னை அழைத்தார்.

திருப்புமுனை:

திருப்புமுனை:

படப்பிடிப்புக்காக மதுரைக்கு சென்றபோது தான் எனக்கு இப்படி ஒரு மோசமான வில்லன் கதாபாத்திரம் என்பது தெரிந்தது. இந்த ரோலில் நடித்தால் நமது பெயர் கெட்டுப்போய் விடுமே என முதலில் தயங்கினேன். ஆனால் முத்தையா சார் தான் சமாதானப்படுத்தி நடிக்க வைத்தார். அவர் சொன்னது போலவே, இந்த கதாபாத்திரம் எனக்கு சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் மகிழ்ச்சி:

மக்கள் மகிழ்ச்சி:

மக்களுடன் இணைந்து மதுரையில் படம் பார்த்தேன். அப்போது இடைவேளையின் போது கவுதம் என்னை வெட்டிக்கொன்றதும், ரசிகர்கள் கைத்தட்டி மகிழ்ந்தனர். இது தான் அந்த கதாபாத்திரத்தின் வெற்றி. மக்களிடம் வெறுப்பை சம்பாதித்தால் தான் வில்லனாக என்னால் உயர முடியும் என்பதை புரிந்து கொண்டேன்.

ஆசை :

ஆசை :

எனது குடும்பத்தின் சொந்த தயாரிப்பில் விஜய் சேதுபதியுடன் இணைந்து மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறேன். அதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. வில்லனாக மட்டுமல்லாமல், காமெடியனாகவும், இன்னும் பல கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். பார்ப்போம் சினிமா என்னை எந்த பாதையில் அழைத்து செல்கிறது", என ரகு ஆதித்யா கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X