அஜீத் என்னை அழைக்கமாட்டாரா என்று காத்திருக்கிறேன்: கௌதம் மேனன்

By Siva

சென்னை: அஜீத் குமார் தன்னை வைத்து படம் எடுக்குமாறு அழைக்க மாட்டாரா என்று தான் காத்துக் கொண்டிருப்பதாக இயக்குனர் கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.

அஜீத் குமாரை வைத்து படம் எடுக்க பல இயக்குனர்கள் ஆர்வமாக உள்ளனர்.

காக்க, காக்கவுக்காக அஜீத்தை அணுகிய கௌதம்

காக்க, காக்கவுக்காக அஜீத்தை அணுகிய கௌதம்

காக்க காக்க படத்தில் நடிக்குமாறு இயக்குனர் கௌதம் மேனன் முதலில் அஜீத் குமாரைத் தான் அணுகியுள்ளார். ஆனால் என்ன நடந்ததோ அதில் சூர்யா நடித்தார்.

மீண்டும் அஜீத்திடம் போன கௌதம்

மீண்டும் அஜீத்திடம் போன கௌதம்

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தை முடித்த பிறகு கௌதம் அஜீத் அணுகி துப்பறியும் ஆனந்த் என்ற படத்தில் நடிக்குமாறு கேட்டார். ஆனால் அஜீத் ஒப்புக்கொள்ளாததால் துப்பறியும் ஆனந்த் மங்காத்தாவாக மாற்றப்பட்டு அதை வெங்கட் பிரபு இயக்கினார்.

அஜீதுக்காக எல்லாம் காத்திருக்க முடியாது

அஜீதுக்காக எல்லாம் காத்திருக்க முடியாது

ஒவ்வொரு முறையும் அஜீத்தை அணுகி ஏமாற்றம் அடைந்த கௌதம் மேனன் கடுப்பாகிவிட்டார். அஜீத்துக்காக எல்லாம் என்னால் காத்திருக்க முடியாது. அவர் இல்லாமலேயே ஹிட் படம் கொடுப்பேன் என்று தெரிவித்தார்.

மனதை மாற்றிக் கொண்ட கௌதம்

மனதை மாற்றிக் கொண்ட கௌதம்

அஜீத்-கௌதம் மேனன் ராசியாகிவிட்டார்கள் போன்று. அவர் என்னை அழைக்க மாட்டாரா என்று தான் காத்திருக்கிறேன். அவர் மட்டும் சொன்னால் உடனே அவருக்காக ஒரு படம் எடுப்பேன் என்று கூறியிருக்கிறார் கௌதம் மேனன். அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் அஜீத்தை சந்தித்தபோது தன்னைப் பற்றி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுள்ளாராம் கௌதம். அஜீத்தும் அதை எல்லாம் விடுங்க பாஸ் என்று கூலாக சொல்லிவிட்டாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X