Just In
- 5 hrs ago
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- 5 hrs ago
விமல் நடிக்கும் படத்தின் பூஜை இன்று இனிதே துவங்கியது !
- 7 hrs ago
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்!
- 8 hrs ago
செம்ம.. வரும் நவம்பரில் ரிலீஸாகிறது ரஜினியின் அண்ணாத்த படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Automobiles
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பணக்காரரை மணந்தால் கஷ்டம் மறையும் என நினைத்தேன்.. அது தவறாகிவிட்டது.. பிரபல நடிகை உருக்கம்!
மும்பை: நான் திருமணம் செய்துகொண்டது பெரிய தவறு என நடிகை ராக்கி சாவந்த் கூறியுள்ளார்.
தமிழில், ரவி- ராஜா இயக்கிய என் சகியே, ஶ்ரீநாத் இயக்கிய முத்திரை படங்களில் ஒரு பாடலுக்கு ஆடியவர் ராக்கி சாவந்த்.
இந்தி நடிகையான இவர், இந்தியில் சில படங்களில் நடித்துள்ளார். மராத்தி, தெலுங்கு, போஜ்புரி படங்களில் நடித்துள்ளார்.
அது ஏடாகூட கேரக்டராச்சே.. 'அந்தாதுன்' தமிழ் ரீமேக்கில் நெகட்டிவ் அவதாரம் எடுக்கும் சிம்ரன்!

யூடியூப் பிரபலம்
இவர் சேனல் ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் மணமகனை தேர்வு செய்து திருமணம் செய்யப் போவதாக அறிவித்தார். அதன்படி, யூடியூப் மூலம் பிரபலமான தீபக் கலால் என்பதை திருமணம் செய்வதாக அறிவித்தார். பிறகு தனது திருமணத்தை ரத்து செய்துவிட்டதாக சொன்னார்.

இங்கிலாந்து தொழிலதிபர்
பின்னர் கடந்த வருடம் இங்கிலாந்து தொழிலதிபர் ரிதேஷ் என்பவரை காதலித்து ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாக அறிவித்தார். ஆனால், கணவர் பற்றியோ அவர் புகைப்படங்களையோ ராக்கி வெளியிடவில்லை. பின்னர் சில நாட்களுக்குப் பிறகு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அழுதபடி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

கைவிட வேண்டாம்
அதில், 'நீங்கள் என்ன சொன்னாலும் கேட்கிறேன். என்னை மட்டும் கைவிட்டுவிட வேண்டாம் என்று கணவருக்குத் தெரிவித்தார். இது பரபரப்பானது. இந்நிலையில், இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் ராக்கி சாவந்திடம் அவர் திருமணம் பற்றி கேட்கப்பட்டது.

அறிவிக்க முடியலை
அப்போது அவர், 'எங்கள் திருமணம் காதல் மற்றும் குடும்பத்தினர் ஏற்பாடு செய்தது. என் கணவர் இங்கிலாந்தைச் சேர்ந்த பிசினஸ்மேன். எங்கள் திருமணம் கடினமான சூழ்நிலையில் நடந்தது. அதனால் அப்போது அறிவிக்க முடியவில்லை. ரசிகர்களின் முன் உங்களை வெளிப்படுத்துங்கள் என்று அவரிடம் கூறிவிட்டேன்.

மிகப்பெரிய தவறு
ஆனால் கடந்த ஒரு வருடமாக இந்தியாவுக்கு அவர் வரவில்லை' என்று தெரிவித்துள்ளார். மற்றொரு பேட்டியில், நான் திருமணம் செய்துகொண்டது மிகப் பெரிய தவறு. என் கடன்களை கட்ட முடியாமல் திவாலாகி இருக்கிறேன். குடும்பச் சுமை என் தோள்மீது இருக்கிறது.

கஷ்டங்களில் இருந்து
பணக்காரரைத் திருமணம் செய்துகொண்டால், என் கஷ்டங்களில் இருந்து வெளியே வந்துவிடலாம் என நினைத்தேன். ஆனால் அது தவறாக முடிந்துவிட்டது என்று கூறியுள்ளார். 'இருந்தாலும் என் வாழ்க்கையை விட்டுவிடவில்லை. போராடிக் கொண்டிருக்கிறேன். மற்றவர்களை போலவே எனக்கும் மன அழுத்தம் இருக்கிறது.

செய்ய மாட்டேன்
சிலர், இதன் காரணமாக தவறான முடிவை எடுக்கின்றனர். தங்கள் வாழ்வையே முடித்து கொள்கின்றனர். ஆனால், நான் அது போல செய்ய மாட்டேன். கடவுள் கொடுத்திருக்கிற இந்த வாழ்க்கை விலை மதிப்பில்லாதது என நம்புகிறேன் என்று நடிகை ராக்கி சாவந்த் கூறியுள்ளார்.