அஜீத்தை நான் தான் பெரிய ஸ்டார் ஆக்கினேன்: இயக்குனர் வஸந்த்

அஜீத் குமாரின் பிறந்தநாளையொட்டி மீடியா ஒன்று சிறப்பு மலர் வெளியிட திட்டமிட்டது. இதையடுத்து அது திரையுலகில் அஜீத்துடன் பணிபுரிந்தவர்களில் பலரிடம் வாழ்த்து வாங்கி அதை சிறப்பு மலராக வெளியிட முடிவு செய்தது. அதன்படி பல திரை பிரபலங்களிடம் கேட்டு வாழ்த்து வாங்கியது.
அஜீத்தை இயக்கிய இயக்குனர் வசந்திடம் வாழ்த்து கேட்டதற்கு அவரோ டிசம்பர் 14ம் தேதி வரும் என் பிறந்நதாளுக்கு அஜீத்திடம் ஒரு வாழத்து வாங்கி போடுங்க பார்ப்போம் என்று தெரிவித்துள்ளார். ஆசை படம் மூலம் அஜீத்தை நான் தான் பெரிய ஸ்டாராக்கினேன். அதை அவர் மறக்காமல் இருந்தால் சரி என்று கிண்டலாகக் கூறி வாழ்த்து தெரிவிக்கவே இல்லையாம்.
வசந்தின் மூன்று பேர் மூன்று காதல் படம் அஜீத்தின் பிறந்தநாளான இன்று தான் ரிலீஸ் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications