திருமணம் முடிந்த கையோடு புதுவீட்டுக்குச் சென்ற காஜல் அகர்வால்.. 'சோல்மேட்'டை மணந்ததாக மகிழ்ச்சி!

By

சென்னை: காதலரை திருமணம் செய்த கையோடு, புதிய வீட்டுக்கு குடியேறி இருக்கிறார் நடிகை காஜல் அகர்வால்.

பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம் மூலம் தமிழில் அறிமுகமானவர், காஜல் அகர்வால்.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால், இந்தியிலும் நடித்து வருகிறார்.

ஹேய் சினாமிகா

ஹேய் சினாமிகா

இவர் நடிப்பில், பாரீஸ் பாரீஸ் படம் அடுத்து வர இருக்கிறது. கமல்ஹாசனின் இந்தியன் 2, நடன இயக்குனர் பிருந்தாவின் ஹேய் சினாமிகா, தெலுங்கில் சிரஞ்சீவி ஜோடியாக ஆச்சார்யா படங்களில் நடித்து வருகிறார். கொரோனா காரணமாக இதன் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியில், மும்பை சாகா என்ற படத்தில் நடித்துள்ளார்.

கோலாகல திருமணம்

கோலாகல திருமணம்

இவரும் மும்பை தொழிலதிபர் கவுதம் கிட்சிலுவும் காதலித்து வந்தனர். இருவீட்டு பெற்றோரும் சம்மதித்ததை அடுத்து இவர்கள் திருமணம் கடந்த 30 ஆம் தேதி மும்பையில் கோலாகலமாக நடந்தது. நெருங்கிய சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

உள் அலங்காரம்

உள் அலங்காரம்

காஜல் மணந்திருக்கும் கவுதம் கிட்சிலு, உள் அலங்கார நிபுணர். வீடுகளுக்கும், அலுவலகங்களுக்கும் உள் அலங்காரம் செய்து கொடுப்பவர். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிக்க இருப்பதாகக் கூறியுள்ள காஜல், இனி, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

கிரகப்பிரவேசம்

கிரகப்பிரவேசம்

இந்நிலையில், திருமணம் முடிந்த கையோடு, அவர்கள் நேற்று புதிய வீட்டில் குடியேறியுள்ளனர். இதற்கான கிரகப்பிரவேசம் நேற்று காலை நடந்துள்ளது. இதில் நடிகை காஜல் அகர்வால், கவுதம் குடும்பத்தினர் கலந்துகொண்டனர். இதை காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வால் உறுதிப்படுத்தினார்.

பாரம்பரிய விழா

பாரம்பரிய விழா

அவர் கூறும்போது, அவர்கள் கனவு இல்லத்தின் கிரகப்பிரவேசம் நடந்தது. அது அழகான பாரம்பரிய விழா. அவர்களை பற்றி பெருமைபடுகிறோம். இருவரும் தனிப்பட்ட முறையில் மிகுந்த ஆர்வத்துடன் இந்த வீட்டை வடிவமைத்துள்ளனர். திருமணத்துக்கு முன்பே இருவரும் சேர்ந்து இந்த கனவு இல்லத்தை சிறப்பாக உருவாக்கியுள்ளனர் என்றார்.

எனது சோல்மேட்

எனது சோல்மேட்

திருமணம் குறித்த தகவல் மற்றும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் அடிக்கடி வெளியிட்டு வந்த காஜல், நேற்றிரவு சில புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அதில், திருமதி ஆனது வரை என்று குறிப்பிட்டுள்ள அவர், எனது நம்பிக்கைக்குரியவர், சிறந்த நண்பர், சோல்மேட்டை திருமணம் செய்துகொண்டேன்.

வைரலாகும் போட்டோஸ்

வைரலாகும் போட்டோஸ்

இவை மற்றும் என் குடும்பத்தை உங்களில் கண்டதில் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார். இதையடுத்து நடிகர், நடிகைகள் உள்பட பலர் அவர்களுக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளனர். இந்தப் புகைப்படங்கள், சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X