20 நாளுக்கு முன்பு கிரேஸி அங்கிளை பார்த்தேனே, நல்லா இருந்தாரே: ஆர்த்தி
Recommended Video
சென்னை: கிரேஸி மோகன் மறைவு குறித்து அறிந்த நடிகை ஆர்த்தி அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பிரபல நடிகரும், கதை-வசன கர்த்தாவும், நாடக எழுத்தாளருமான கிரேஸி மோகன் மாரடைப்பால் இன்று மரணம் அடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் குணமடைந்து வீடு திரும்ப வேண்டு என்று பிரார்த்தனை செய்த ரசிகர்கள் தற்போது கவலையில் உள்ளனர்.
இந்நிலையில் திரையுலக பிரபலங்கள் கிரேஸி மோகன் குறித்து ட்வீட் செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஆர்த்தி
என்னால் நம்பவே முடியவில்லை. 20 நாட்களுக்கு முன்பு தான் எங்கள் ப்ராஜெக்ட் குறித்து ஆலோசனை செய்ய அங்கிளை சந்தித்தோம். கண் பார்வை பிரச்சனை மட்டுமே இருந்தது.. வாழ்க்கை எதிர்பார்க்க முடியாதது.. அதிர்ச்சியாக உள்ளது என்று நடிகை ஆர்த்தி ட்வீட் செய்துள்ளார்.
வெங்கட் பிரபு
ஓமைகாட் கிரேஸி மோகன் சார்.. அவரின் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் என்று தெரிவித்துள்ளார் இயக்குநரும், நடிகருமான வெங்கட் பிரபு.
ஜி.வி. பிரகாஷ்
கிரேஸி மோகன் சார், உங்கள் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. என்றுமே மிஸ் பண்ணப்படும் லெஜன்ட் எழுத்தாளர். .. குடும்பத்தாருக்கு அனுதாபங்கள் என்று இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
நவீன்
கிரேசி மோகன் சார் இழப்பு தமிழ் சினிமாவிற்கு பேரிழப்பே. தமிழ் சினிமாவில் @ikamalhaasan சாருடன் இணைந்து அவர் ஒரு புதிய காமடி வடிவம் படைத்தார். அவர் வசனத்தில் ஒரு காமடிக்காக காத்திருக்க வேண்டியதில்லை. சரவெடியாய் வெடித்துகொண்டே இருக்கும் என்று இயக்குநரும், நடிகருமான நவீன் கூறியுள்ளார்.
#CrazyMohanLeavesAVoid
#RespectsCrazyMohan
கவலை
திரையுலக பிரபலங்கள் மட்டும் இல்லை கிரேஸி மோகனின் ரசிகர்களும் கவலையில் உள்ளனர். குறிப்பாக 90ஸ் கிட்ஸால் கண்ணீர் வடிக்காமல் இருக்க முடியவில்லை. என்னை எடுத்துக் கொள்ளாமல் கடவுள் கிரேஸி மோகனை எடுத்துக் கொண்டாரே என்று சொல்லும் அளவுக்கு ரசிகர்கள் மனதை வென்றுள்ளார் அவர். கிரேஸி மோகன் மறைந்தாலும் அவரின் படைப்புகள் மூலம் என்றும் நிலைத்து நிற்பார் என்பதில் சந்தேகமே இல்லை.


Click it and Unblock the Notifications