கொரோனா சமயத்தில் விஜய் ஆன்டனி எதை ரொம்ப 'மிஸ்' பண்றாரு தெரியுமா ?
சென்னை : கொரோனா இரண்டாம் அலையால் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருவதால் கோலிவுட்டில் படப்பிடிப்புக்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள 2 வார முழு ஊரடங்கால் சின்னத்திரை படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

மறு உத்தரவு வரும் வரை படப்பிடிப்புக்கள் அனைத்தும் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆன்டனி, தான் எதை மிகவும் மிஸ் செய்கிறார் என்பதை இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
விஜய் ஆன்டனியின் நீண்ட பதிவில், தினமும் காலையில் சீக்கிரம் எழுந்து, படப்பிடிப்பு தளத்திற்கு சென்று, கேரக்டருக்காக ரெடி ஆவது. டயலாக்கிற்கு தயார் செய்வது. தயாரிப்பு தொடர்பாக டைரக்டருடன் ஆலோசனை, நடிப்பு, அதற்கான உணர்ச்சி வெளிப்பாடு என மிகவும் அழகான இடம் படப்பிடிப்பு தளம். அதை ரொம்ப மிஸ் பண்ணுறேன்.
கொரோனா மற்ற தொழில்களைப் போல் சினிமா துறையையும் மொத்தமாக முடக்கி போட்டு விட்டது. இந்த கடினமான சூழலில் இருந்து மீண்டு வருவோம் என நம்புகிறேன். அதுவரை மற்றவர்களுடன் பாசிட்டிவிட்டியை பகிருங்கள். திரைத்துறை சேர்ந்த அனைத்து ஆண், பெண்ணிடமும் அன்புடன் இருங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
விஜய் ஆன்டனி தற்போது காக்கி, பிச்சைக்காரன் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அத்துடன் நவீன் இயக்கத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடிக்கும் அக்னி சிறகுகள் படத்திலும் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











