For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நான் டீ கடையை ரொம்ப மிஸ் பண்றேன்..பிக்பாஸ் கவின் ஏக்கம் !

  |

  சென்னை : நான் டீ கடைகளை ரொம்ப மிஸ் பண்றேன் என்று ஏக்கமாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் பிக்பாஸ் கவின் .

  Quarantine Cleaning Challenge | Rio Raj | Pandian Stores Kathir | Lock Down

  பிக்பாஸ் கவின் சீசன் 3யை பொருத்தவரையில் ஒரு அன்டர்ரேட்டட் ஹீரோ என்றே கூறலாம். ஏனெனில் பிக்பாஸ் சீசன் 3 மிக சுவராஸ்யமாக சென்று பெரிய அளவிளான வெற்றியை அடைய கவினின் பங்கு மிக முக்கியமானது.

  'அது' தெரிய செம ட்ரான்ஸ்ப்ரன்ட் டிரெஸ்.. செல்பி போட்டோவை ஷேர் செய்த ஆண்ட்ரியா!

  I miss the tea shop, kavin instagram post

  முதல் நாளில் வந்து அனைத்து பெண்களையும் நான் காதலிக்க போகிறேன் என்று கவின் ஆரம்பித்ததில் இருந்து வீட்டில் வெடிக்காத கலவரங்களே இல்லை என்று சொல்லலாம் அது முதல் நாமினேட் செய்து மக்களால் வெளியேற்றபடாமல் தானே முன் வந்து பணத்தை எடுத்து சென்றது வரை கவின் சீசன் 3யை பல உச்சகட்ட நிலைக்கு எடுத்து சென்றிருக்கிறார் .

  இப்படி மிக பெரிய பெயருக்கு பின் வீட்டை விட்டு வெளியே வந்த கவின் தற்போது பிகில் படம் மூலம் பிரபலமடைந்த அம்ரித்தா உடன் லிப்ட் என்ற த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் வேலைகள் தீவிரமாக சென்று கொண்டிருந்தது. இந்த நேரத்தில் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி இதுவரையில் ரசிகர்களிடம் நல்ல பாராட்டை பெற்று இருக்கிறது .

  கொரோனா தாக்கத்தினால் மார்ச் 17 முதல் இந்தியா முழுக்க அனைத்து பட வேலைகளும் நிறுத்தப்பட்டது. இதனால் லிப்ட் படத்தின் பணிகளும் பாதியில் நின்றுள்ளது. மேலும் மக்கள் முதல் பல பிரபலங்கள் வரை தங்களின் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.

  I miss the tea shop, kavin instagram post

  இந்த நேரத்தில் கவின் தான் ரோட்டின் அருகே அமர்ந்து டீ குடிக்கும் ஒரு புகைப்படத்தை பதிவேற்றி தற்போது நான் எல்லா டீ கடைகளை மிஸ் பண்றேன் என்று ஏக்கமாக கூறியிருக்கிறார். மேலும் இது அனைத்தும் நன்மைக்காக தான் என்று கூறி ஸ்டே ஹோம் ஸ்டே சேஃப் என்ற ஹாஸ்டேக்குகளை பதிவிட்டிருக்கிறார்.

  கவினின் பதிவை பார்த்த 'கனா' நாயகன் தர்ஷன் கவின் நானும் உன்னை போல மிஸ் செய்கிறேன். நீ டீ கடைக்கு போவதென்றால் சொல் நானும் வருகிறேன் என்று கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த கவின் ஒன்னா அடி வாங்க பிளான் வேற என்று ஜாலியாக கிண்டல் செய்திருக்கிறார்.

  I miss the tea shop, kavin instagram post

  கவின் மட்டுமல்ல பல முக்கிய பிரபலங்களும் தங்களின் இயல்பு வாழ்கையை இழந்து சமூக வலைத்தளங்கள் எங்கும் சோகப் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர் .ஆனால் வீட்டில் இருப்பது தான் அனைவராலும் செய்ய கூடிய ஒரே முயற்சி இதை நாம் செய்தே ஆக வேண்டும் என்றும் அப்போது தான் கொரோனாவை மொத்தமாக அகற்ற முடியும் என்று பலர் கூறியுள்ளனர்.

  English summary
  I miss the tea shop, Bigg Boss 3 fame Kavin has said in his Instagram post.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more
  X