Don't Miss!
- News
கலெக்டரை மாத்துங்க.. பணப் பட்டுவாடா ஜரூர்.. அமைச்சர்கள் முறைகேட்டில் ஈடுபடுவதாக தேமுதிக புகார்!
- Technology
வீட்டுல இருக்குற எல்லோருக்கும் 1 வாங்கும் விலையில் அறிமுகமான Noise இயர்பட்ஸ்!
- Automobiles
மாருதியின் புதுமுக காரை டெலிவரி பெற்ற ஜப்பான் தூதரக தலைவர்! எந்த காருனு தெரிஞ்சா நீங்களும் வாங்க விரும்புவீங்க
- Finance
மார்ச் மாதம் கெடு.. அதானி குழுமத்திற்கு வந்த புதிய பிரச்சனை..!
- Sports
ரோகித்திற்கு பெரிய சம்பவம் இருக்கு.. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்.. முன்னாள் பயிற்சியாளர் சுவாரஸ்ய தகவல்!
- Lifestyle
செக்ஸ் ஆண்களுக்கும், பெண்களுக்கும் எவ்வளவு கலோரிகளை எரிக்கிறது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க...!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
மாமன்னன்ல யோகி பாபுவை மிஸ் பண்றேன்... மாரி செல்வராஜ்!
சென்னை : இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் என இரண்டு படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது
அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் மாமன்னன் என்ற படத்தை மாரி செல்வராஜ் தற்போது இயக்கி வருகிறார்
பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் என இரண்டு படங்களிலும் யோகிபாபுவை முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்த மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தில் யோகி பாபுவை மிஸ் செய்வதாக கூறியுள்ளார்
பஸ் கூட உங்க ஊர்ல நிக்காதுன்னு எல்லாரும் கிண்டல் பண்ணாங்க... மாரி செல்வராஜ் பட்ட அவமானங்கள்!

குணச்சித்திர கதாபாத்திரங்களிலும்
யாரையும் காயப்படுத்தாத தனித்துவமான காமெடி மூலம் தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி காமெடியனாக உள்ளவர் நடிகர் யோகிபாபு. காமெடியனாக மட்டுமில்லாமல் ஹீரோவாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் தன்னை ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம் காட்டி வரும் யோகி பாபு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் மற்றும் பரியேறும் பெருமாள் என இரண்டு படங்களிலுமே மிக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்.

நட்புக்கு முக்கியத்துவம்
முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் காமெடியனாக கலக்கிய மாரி செல்வராஜ் யோகி பாபுவை பரியேறும் பெருமாள் படத்தில் காமெடி கலந்த அதே சமயம் சாதிகளையும் தாண்டி நட்புக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருப்பார். பரியேறும் பெருமாள் படத்தில் யோகிபாபு நடிக்கும் அனைத்து காட்சிகளும் மிக முக்கியமான காட்சிகளாக வைக்கப்பட்டிருக்கும்

நெகட்டிவ் ஷேட்
இவ்வாறு யோகி பாபு, மாரி செல்வராஜ் கூட்டணியில் தன்னுடைய முதல் படத்திலேயே வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்ததோடு அடுத்த படத்தில் யாரும் எதிர்பார்த்திராத சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தில் நெகட்டிவ் ஷேட் கொண்ட ரொம்பவே முக்கியமான கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்திருப்பார். காமெடி மட்டுமல்ல சீரியஸான கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக்க முடியும் என நிரூபித்து காட்டிய யோகி பாபு ஒரு காட்சியில் காவல் நிலையத்தில் அனைவரையும் கண்கலங்க வைத்திருப்பார்.

சற்று ஏமாற்றமாக
இவ்வாறு யோகி பாபு, மாரி செல்வராஜ் இணைந்து 2 படங்களில் பணியாற்றி வந்ததால் இருவருக்குமிடையே நட்பு மிக ஆழமானது. இந்த நிலையில் மாரி செல்வராஜ் அடுத்து இயக்கும் மாமன்னன் படத்தில் யோகி பாபு இருப்பார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் மாமன்னன் படத்தில் யோகி பாபு இடம்பெறாதது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமாகவே அமைந்தது.

மாமன்னன்ல யோகி பாபுவை மிஸ் பண்றேன்
மாமன்னனில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்க வடிவேலு காமெடியனாக நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் விழா ஒன்றில் பேசிய மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் படத்தில் பணியாற்றியதிலிருந்து யோகி பாபு மீது எனக்கு மிகப்பெரிய பற்று உள்ளது. அதனாலேயே அடுத்த படத்திலும் இருவரும் இணைந்து பணியாற்றினோம். யோகி பாபுவை வித்தியாசமான கதாபாத்திரங்களில் பார்க்க வேண்டும் என்பதே எனது ஆசை. ஆனால் இப்பொழுது மாமன்னன் படத்தில் யோகி பாபுவை ரொம்ப மிஸ் பண்றேன் என மாரி செல்வராஜ் பேசியுள்ளார்.