அன்பே சிவம் படத்தை நான் தவறவிட்டிருக்க கூடாது.. இப்போ வருந்துகிறேன்!

சென்னை : சுந்தர் சியின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் அன்பே சிவம்

2003ஆம் ஆண்டு வெளியான இந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமல் தோல்வியை அடைந்தது.

அன்பே சிவம் காலங்கள் பல கடந்தும் இப்பொழுது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இதில் நடிகர் அரவிந்த்சாமி நடிக்க இருந்த அந்த வாய்ப்பை தவற விட்டு விட்டாராம்.

 படுதோல்வியை சந்தித்தது

படுதோல்வியை சந்தித்தது

தொடர்ந்து காமெடி திரைப்படங்களின் மூலம் ரசிகர்களின் ஃபேவரைட் இயக்குனராக வலம் வந்த இயக்குனர் சுந்தர் சி முதல் முறையாக வித்தியாசமான படத்தை இயக்கிய திரைப்படம் அன்பே சிவம். கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் கடந்த 2003ஆம் ஆண்டு வெளியானது. வித்தியாசமான கதைக்களத்தை வெளியான இந்தப் படம் ரிலீஸானபோது ரசிகர்களால் பெரிதாகக் கொண்டாடப்படவில்லை மிகப்பெரிய வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. கமல்ஹாசன் இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்.

 ஃபேவரைட் திரைப்படமாக

ஃபேவரைட் திரைப்படமாக

கமல்ஹாசன்,மாதவன், கிரண், நாசர், உமா ரியாஸ்,சந்தானபாரதி என மிகப்பெரிய பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த இந்த படம் இப்பொழுது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது இன்னும் சொல்லப்போனால் பலரது ஃபேவரைட் திரைப்படமாக அன்பே சிவம் உள்ளது. இதில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களின் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. கலகலப்பான காமெடி படங்களை கலர்ஃபுல்லாக இயக்கி வந்த சுந்தர் சி இயக்கத்தில் இப்படி ஒரு படமா என ரசிகர்கள் இப்பொழுதும் ஆச்சரியத்துடன் பார்த்த படம் என்றால் அது அன்பே சிவம்.

 அன்பிற்கும் கடவுளுக்குமான வேறுபாட்டை

அன்பிற்கும் கடவுளுக்குமான வேறுபாட்டை

கமல்ஹாசன் மற்றும் மாதவனுக்கு இடையேயான காட்சிகள் அன்பிற்கும் கடவுளுக்குமான வேறுபாட்டை ரசிகர்களுக்கு உணர்த்த செய்தது. இதில் கமல்ஹாசன் கதாபாத்திரம் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவிற்கு மாதவனின் கதாபாத்திரம் பேசப்பட்டது. கமல்ஹாசன் மற்றும் மாதவனின் கதாபாத்திரம் இரண்டும் சரிசமமாக அமைக்கப்பட்டிருந்தது.

 நான் நடிக்க வேண்டியது

நான் நடிக்க வேண்டியது

அன்பே சிவம் படத்தில் மாதவன் நடத்து இருந்த கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி தான் முதலில் நடிக்க இருந்தாராம். ரோஜா,பம்பாய் என ஆரம்பமே அட்டகாசமாக தமிழில் அறிமுகமாகி பெண்களின் கனவு கண்ணனாக இருந்த அரவிந்த்சாமி இடையில் சிறிது காலம் நடிப்பில் இருந்து சற்று விலகி இருந்தார். இந்த நிலையில் அன்பே சிவம் படத்தில் மாதவன் நடித்த கதாபாத்திரத்திற்கு முதலில் அரவிந்த்சாமியை அணுகியுள்ளனர். ஆனால் அப்பொழுது சில சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அரவிந்த்சாமி அந்த வாய்ப்பை தவறவிட்டு விட்டார். எப்போது அன்பே சிவம் படத்தைப் பார்த்தாலும் இப்படி ஒரு வாய்ப்பை தவற விட்டிருக்கக்கூடாது என ஃபீல் செய்து வருகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X