»   »  ‘ஐ’ படத்திற்கு கேளிக்கை வரி வழங்க மறுப்பு: புதுச்சேரி அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்

‘ஐ’ படத்திற்கு கேளிக்கை வரி வழங்க மறுப்பு: புதுச்சேரி அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐ' படத்துக்கு கேளிக்கை வரிச் சலுகை வழங்க மறுத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், புதுச்சேரி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக கடலூரைச் சேர்ந்த ஜி.சுந்தர்ராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது:

பிரபல இயக்குநர் ஷங்கர் இயக்கிய ‘ஐ' படத்தின் கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி பகுதி விநியோக உரிமையை நான் பெற்றுள்ளேன். தமிழில் பெயர் வைத்துள்ள மற்றும் தமிழ் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரிச்சலுகை வழங்குவது என்று கடந்த 2007ஆம் ஆண்டு புதுச்சேரி மாநில அரசு அரசாணை வெளியிட்டது.

கேளிக்கை வரிக்கு மறுப்பு

கேளிக்கை வரிக்கு மறுப்பு

இதன் அடிப்படையில், வரிச்சலுகைக்கு தகுதியுள்ள திரைப்படங்களை தேர்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு ‘ஐ' படத்துக்கு கேளிக்கை வரிச்சலுகை வழங்க மறுத்து விட்டது.

தனித்தன்மை சொல்

தனித்தன்மை சொல்

‘ஐ' என்ற சொல் ஆச்சரியத்தை வெளிப்படுத்தும் பேச்சு வழக்கு சொல்லாகும். இந்தியாவில் எந்த ஒரு மொழியிலும் இல்லாத தனித்தன்மை வாய்ந்த ‘ஐ' என்ற சொல் தமிழில் மட்டுமே உள்ளது. ச

சட்டவிரோதம்

சட்டவிரோதம்

இப்படத்துக்கு கேளிக்கை வரிச்சலுகை வழங்க முடியாது என்று புதுச்சேரி மாநில அரசு பிறப்பித்துள்ள உத்தரவு சட்ட விரோதமானது. எனவே, இந்த உத்தரவை ரத்து செய்து ‘ஐ' படத்துக்கு வரிச் சலுகை வழங்க புதுச்சேரி மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

புதுச்சேரி அரசுக்கு நோட்டீஸ்

புதுச்சேரி அரசுக்கு நோட்டீஸ்

இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் டி.டி.ரவிச்சந்திரன் ஆஜரானார். மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்கும்படி புதுச்சேரி மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

English summary
Madras High court notice to Puducherry Government for ‘I’ movie exemption of Entertainment tax denied.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil