Don't Miss!
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- News ஜஸ்ட் 26 வயசு தான்! தனிஆளாய் பாஜக-காங்கிரசை மிரட்டும் ராஜ்புத் இளைஞர்! யார் இந்த ராஜஸ்தான் ரவீந்திரா
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Sports Thank you ரஹானே! தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்க.. தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு வாய்ப்பு ஏன்?
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
3 வேளையும் நல்லா சமைக்க தெரிந்த மாப்பிள்ளை வேணும் -அதா சர்மா ட்வீட்
சென்னை: நடிகை அதா சர்மா தன்னுடைய ட்விட்டரில் மணமகன் தேவை என விளம்பரம் செய்துள்ளார். அதில் பல கண்டிசன்களைப் போட்டிருக்கிறார். அவரது கண்டிசனுக்கு ஏற்ற மாப்பிள்ளை கிடைப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கணும்.
தமிழில் சார்லி சாப்லின் 2, இது நம்ம ஆளு போன்ற படங்களில் நடித்திருக்கும் அதா சர்மா தற்போது இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். தற்போது இந்தியில் கமாண்டோ 3 திரைப்படத்தில் நடித்து வருகிறார் அதா சர்மா.
அதா சர்மா மும்பையில் வசிக்கும் தமிழ் பிராமண குடும்பத்தை சேர்ந்தவர். அதா சர்மாவின் பிரத்யேக பொழுதுபோக்கு ட்விட்டர் ஆகும். ட்விட்டரில் அடிக்கடி கருத்து கந்தசாமியாக மாறி கருத்து சொல்லி வருவது இவருடைய அன்றாட பழக்கமாகும். தற்போது அவருடைய ட்விட்டரில் தேவை என்று குறிப்பிட்டு ஒரு பதிவிட்டுள்ளார்.
|
மாப்பிள்ளை தேவை
சிரித்த முகத்துடன் மூன்று வேளை சமைக்க வேண்டும். வழக்கமாக ஷேவ் செய்ய வேண்டும். இந்திய பாரம்பரிய உடைகளை மட்டுமே அணிய வேண்டும். தினமும் 5 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். வீட்டிலும் வெளியிலும் மது அருந்தக் கூடாது என்று கண்டிஷன்களை போட்டுள்ளார் அதா சர்மா.
|
வெங்காயம் சாப்பிடக்கூடாது
அதில், வெங்காயம் சாப்பிடாத மாப்பிள்ளை தேவை. சாதி, நிறம், ஷு சைஸ், விசா, நீச்சல் திறமைகள், தோள் வலிமை அளவு, இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள், ஜோதிடம் ஆகிய தகுதிகள் தேவையில்லை.
சினிமா ரசிகன்
இந்திய மொழியில் உள்ள அனைத்து மொழி திரைப்படங்களை ரசிக்கவும், மதிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். அவற்றை உற்சாகமாக பார்க்க வேண்டும் என்று ஏகப்பட்ட நிபந்தனைகளையும் தெரிவித்துள்ளார் நடிகை அதா சர்மா.
கண்டிசன் பலே
வழக்கமாக கல்யாணம் பண்ண நினைக்கிற பொண்ணும் பையனும் நிறைய ஆசை வைத்திருப்பார்கள். ஆனால் நடிகை அதா சர்மா போடும் கண்டிசன் எல்லாமே வித்தியாசமாக இருக்கிறது. அவர் அவர்களுக்கு பிடித்த உணவுகள் உடைகள் இருக்கும் போது, நடிகை அதா சர்மாவிற்கும் ஆசைகள் இருப்பதில் தப்பே இல்லை.
மாப்பிள்ளை கிடைப்பாரா
மேற்குறிப்பிட்ட தகுதி மற்றும் அனைத்து திறமைகள் உங்களுக்கு இருக்குதா. அப்படின்னா லேட் பண்ணாம சட்டுபுட்டுன்னு நடிகை அதா சர்மாவை காண்டாக்ட் பண்ணி பேசுங்க. அட அதாசர்மாவிற்கு அவரது கண்டிசனுக்கு ஏற்ற திறமையும் தகுதியும் கொண்ட மாப்பிள்ளை கிடைப்பாரா பொறுத்திருந்து பார்க்கலாம்.