உற்றான் படத்தில் அரைநிர்வாணமாக நான் நடிக்கவில்லை-பிரியங்கா நாயர்

சென்னை: 'உற்றான்' திரைப்படத்தில் தான் அறை நிர்வாணமாக நடித்துள்ளதாக வெளியான செய்தி எதுவும் உண்மையில்லை என்று நடிகை பிரியங்கா நாயர் மறுப்பு தெரிவித்துள்ளார். அதோடு இயக்குனர் ராஜா கஜினி 'உற்றான்' திரைப்படம் மூலம் எனக்கு தமிழ் சினிமாவில் ஒரு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். அதற்காக இயக்குனருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என்று பிரியங்கா நாயர் குறிப்பிட்டுள்ளார்.

உருகுதே மருகுதே என்ற பாடலை ஒரு முறையேனும் முணுமுணுக்காதவர்கள் என எவராவது இருப்பார்களா என்ன. அந்த அளவிற்கு வெயில் படத்தில் ஜி.வி. பிரகாஷின் இசையில் பாடல்கள் அற்புதம்.

I never acting naked in Utraan Movie-Priyanka Nair

அந்த பாடல் மூலம் மிகவும் பிரபலமான நடிகை பிரியங்கா நாயர். வெயில் படம் மூலம் தமிழ் சினிமாவிக்குள் அறிமுகமானவர். அதற்கு பிறகு ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தாலும் மலையாள படங்களில் பெரும்பாலும் நடித்து வந்தார்.

தற்போது தமிழில் இயக்குனர் ராஜா கஜினி தயாரித்து இயக்கும் உற்றான் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரின் கதாபாத்திரம் குறித்து பல தரப்பட்ட தவறான விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

I never acting naked in Utraan Movie-Priyanka Nair

அவர் அறை நிர்வாணமாக படத்தில் மிகவும் துணிச்சலாக நடித்துள்ளார் என்றெல்லாம் பொய் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், இவை எதுவுமே உண்மையில்லை என்று அதிரடியாக பதிலளித்துள்ளார் பிரியங்கா.

இந்த தவறான விமர்சனங்கள் குறித்து பிரியங்கா கூறுகையில், இது ஒரு தவறான தகவல், இயக்குனர் ராஜா கஜினி உற்றான் திரைப்படம் மூலம் எனக்கு தமிழ் சினிமாவில் ஒரு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நல்ல வாய்ப்பு கொடுத்ததற்கு இயக்குனர் சாருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

I never acting naked in Utraan Movie-Priyanka Nair

மலையாளத்தில் சில ஆண்டுகள் பிஸியாக இருந்ததால் தமிழ் படங்களில் கவனம் செலுத்த இயலவில்லை. ஆனால் தற்போது தமிழ் சினிமாவில் நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறேன். நிச்சயம் உற்றான் திரைப்படம் எனக்கு தமிழ் சினிமாவில் நல்ல பேரை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கை உள்ளது.

மேலும் உருகுதே மருகுதே பாடலை ஆட்டோ ஸ்டாண்ட் மற்றும் போன் ரிங்டோனாக கேட்கும் போதெல்லாம் என் மனம் அவ்வளவு சந்தோஷப்படும். இந்த அளவுக்கு மக்கள் மனதில் அந்த பாடல் நிலைத்திருப்பதற்கு அந்த படத்தின் இசையமைப்பாளர் தான் காரணம். ரசிகர்களின் இந்த ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறேன், என்று கூறியுள்ளார்.

I never acting naked in Utraan Movie-Priyanka Nair

தற்போது தமிழ் சினிமாவில் வாய்ப்பு பெறுவதற்காக ஒரு போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அவரது இந்த ட்ரெண்டிங் ஆன போட்டோஸ் மற்றும் அவரது திறமையான நடிப்பிற்கு நிச்சயம் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். 1994ஆம் ஆண்டில் ஒரு கல்லுரியில் நடந்த உண்மை சம்பவத்தை மிகவும் துணிச்சலோடு கையாண்டு இருக்கிறார் இயக்குனர் ராஜா கஜினி.

இந்த படத்தில் ரோஷன் மற்றும் அறிமுக நாயகி ஹிரோஷிணி கோமலி நடித்துள்ளனர். இப்படத்தின் ஆடியோ லான்ச் இன்று பெரும் விமரிசையாக நடைபெறவுள்ளது.

More from Filmibeat

Read more about: priyanka nair
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X