twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகையாகற அளவுக்கு நான் அழகில்லைன்னு நெனைச்சேன்... காயல் நாயகி வெளிப்படை

    |

    சென்னை : பாடலாசிரியர் தமயந்தி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் காயல்.

    இந்த படத்தில் லிங்கேஷ், ஐசக் வர்கீஸ், காயத்ரி ஆகியோருடன் பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன் நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.

    தெரிந்த முகங்களின் மரணம்: எமனின் கையில் இருப்பது பாசக்கயிறு அல்ல பாசவலை.. பிரபல இயக்குநர் உருக்கம்!தெரிந்த முகங்களின் மரணம்: எமனின் கையில் இருப்பது பாசக்கயிறு அல்ல பாசவலை.. பிரபல இயக்குநர் உருக்கம்!

    இந்நிலையில் தன்னை சிறுவயதில் கருவாச்சி என்றே மற்றவர்கள் அழைப்பார்கள் என்பதை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

    காயல் திரைப்படம்

    காயல் திரைப்படம்

    ஜே ஸ்டூடியோஸ் தயாரிப்பில் பாடலாசிரியர் தமயந்தி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் காயல். இந்த படத்தில் லிங்கேஷ், ஐசக் வர்கீஸ், காயத்ரி ஆகியோருடன் புதுமுகம் ஸ்வாகதா கிருஷ்ணன் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். அனுமோள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    ஸ்வாகதா அறிமுகம்

    ஸ்வாகதா அறிமுகம்

    ஜாதி மாற்று திருமணத்தை எதிர்க்கும் பெற்றோர்களால் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பேசும் படமாக இந்த படம் உருவாகியுள்ளது. இதனிடையே இந்த படத்தின்மூலம் நடிகையாக அறிமுகமாகியுள்ள ஸ்வாகதா, தான் தன்னை எப்போதும் ஒரு நடிகையாகும் அளவிற்கு அழகானவள் என்று கருதியதில்லை என்று தெரிவித்துள்ளார்.

    கருவாச்சி என விமர்சனம்

    கருவாச்சி என விமர்சனம்

    ஆனால் பள்ளி நாட்களில் தான் நாடகங்களில் நடித்துள்ளதாகவும், விளையாட்டு போன்றவற்றில் ஈடுபட்டதால், கருப்பாகவும் ஒல்லியாகவும் இருந்ததால் அனைவரும் தன்னை கருவாச்சி என்று கூப்பிட்டு அவமானப்படுத்துவார்கள் என்றும் கூறியுள்ளார்.

    நடிகை வாய்ப்பு

    நடிகை வாய்ப்பு

    சென்னைக்கு தான் பாடகியாகவே வந்ததாகவும் ஆனால் தமயந்தி தனக்கு நடிக்கும் வாய்ப்பை வழங்கியதாகவும் ஸ்வாகதா தெரிவித்துள்ளார். தமயந்தியிடம் கதையை கேட்டவுடன் தனக்கு பிடித்து விட்டதாகவும் அவர் மேலும் கூறினார். ஆனால் முதல்முறையாக கேமரா முன்பு நிற்கும்போது தான் மிகவும் பதற்றமடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

    Recommended Video

    Sundari Serial Gabriella Shocking Video Post கொரோனா ஒரு பாடு படுத்திடுது
    18 நாட்களில் படப்பிடிப்பு

    18 நாட்களில் படப்பிடிப்பு

    ஆனால் தொடர்ந்து தன்னுடைய நடிப்பை சக நடிகர்கள், மற்றும் மற்ற கலைஞர்கள் பாராட்டும்வகையில் தான் நடிப்பில் தேறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, வேளாங்கண்ணி, நாகர்கோவில், ராமேஸ்வரம், பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் 18 நாட்களில் படப்பிடிப்பை முடித்துவிட்டு வந்துள்ளது படக்குழு.

    Read more about: actress நடிகை
    English summary
    They shot the film in 18 days, in places like Velankanni, Nagercoil, Rameswaram and Pondicherry
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X