சூர்யா கிட்ட இயக்குனர் பாலா சொன்னதை மறக்கவே முடியாது!

சென்னை: இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் சூர்யாவின் வித்தியாசமான நடிப்பில் வெளியான திரைப்படம் நந்தா

சூர்யாவுக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய இந்த படத்தில் நடிகர் கருணாஸ் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

நந்தா படத்தில் நடித்தபோது சூர்யாவிடம் பாலா தன்னை பற்றி கூறியதை மறக்கவே முடியாது என பழைய நினைவுகளை நடிகர் கருணாஸ் பகிர்ந்துள்ளார்

முரட்டுத்தனமான ரவுடியாக

முரட்டுத்தனமான ரவுடியாக

தமிழ் சினிமாவில் நடிப்பின் நாயகனாக ஜொலித்துக் கொண்டிருக்கும் சூர்யாவிற்கு ஆக்ஷன் ஹீரோ அவதாரத்தை கொடுத்த திரைப்படம் நந்தா. சேது வெற்றிக்கு பிறகு இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான நந்தா படத்தில் சூர்யா முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதுவரை சாக்லேட் பாய் கதாபாத்திரங்களில் நடித்து வந்த சூர்யா இந்தப் படத்தில் முரட்டுத்தனமான ரவுடியாக நடித்து இருந்தது பலரையும் பாராட்ட வைத்தது. அதுமட்டுமல்லாமல் சூர்யா அது வரை வந்த படங்கள் அனைத்தும் இயல்பான கதைகளிலேயே வந்ததால் நந்தா சூர்யாவின் திரை கேரியரிலேயே மிக வித்தியாசமான படமாக அமைந்தது

லொடுக்கு பாண்டி

லொடுக்கு பாண்டி

நந்தாவில் கருணாஸ் லொடுக்கு பாண்டி என்ற கதாபாத்திரத்தில் காமெடியனாக அறிமுகமாகி இருப்பார். நாட்டுப்புற பாடல்கள் மூலம் பிரபலமடைந்த கருணாஸ் நடிகராக நந்தா மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து பல படங்களில் காமெடியனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தனது தனித்துவமான காமெடியின் மூலம் மக்களை ரசிக்க வைத்த கருணாஸ் இப்போது குணச்சித்திர நடிகராகவும் தனி இடத்தை பிடித்துள்ளார்.

சிறுவயது ராஜனாக

சிறுவயது ராஜனாக

கருணாசை தொடர்ந்த அவரது மகன் கென் கருணாஸ் இப்பொழுது படங்களில் நடித்து வருகிறார். இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்தில் கருணாஸ் மகன் கென் கருணாஸ் நடித்து பாராட்டுக்களை பெற்றிருப்பார். இந்த நிலையில் வட சென்னை 2ல் சிறுவயது ராஜனாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

கருணாஸுக்கு முதல் படம்

கருணாஸுக்கு முதல் படம்

கருணாஸ் இப்பொழுது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் மட்டும் நடித்து வருகிறார். இந்த நிலையில் நந்தா படத்தில் நடித்தபொழுது பாலா தன்னை பற்றி சூர்யாவிடம் பாராட்டி கூறியதை நினைவு கூர்ந்து பகிர்ந்துள்ளார். நந்தா கருணாஸுக்கு நடிகராக முதல் படமாகவே இருந்தாலும் முதல் படம் என்ற எந்த ஒரு சாயலும் தெரியாத அளவிற்கு மிக நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அதேபோல படப்பிடிப்பிலும் இருந்த கருணாஸ் முதல் நாள் ஷூட்டிங்கில் நடித்தபோது பார்த்த பாலா சூர்யாவிடம் நானும் இதுவரை பல நடிகர்களை பார்த்துள்ளேன்.

பிரமாதமாக நடிக்கிறார்

பிரமாதமாக நடிக்கிறார்

அனைவரும் முதல் படத்தில் நடிக்கும் போது சற்று தயக்கமாகவே இருப்பார்கள் சுற்றியும் மக்கள் கூட்டம் இருக்கும் கேமரா இருக்கும் என்ற எந்த ஒரு தயக்கத்தையும் கருணாஸ் இடம் பார்க்க முடியவில்லை பிரமாதமாக நடிக்கிறார் எனக் கூறியுள்ளார் பாலா. சிறுவயது முதலே நாட்டுப்புறப்பாடல்கள் மேடைகளில் பாடி வந்ததால் அதுபோன்ற தயக்கம் எனக்கு எந்த இடத்திலும் தோன்றவில்லை என கருணாஸ் நந்தா படத்தில் நடந்த சுவாரசிய அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X