இந்தப் பக்கம் இளையராஜா... அந்தப்பக்கம் நான்... எல்லாம் தன்னால அமைஞ்சது... உருகும் விஜய் ஆண்டனி

By

சென்னை: இளையராஜா இசையில் நடிப்பேன், பாடுவேன் என்றும் நினைத்துக் கூட பார்க்கவில்லை என்று சொன்னார் விஜய் ஆண்டனி.

இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி, 'நான்' படம் நடிகராக அறிமுகமானார். அந்தப் படம் ஹிட்டானதை அடுத்து தொடர்ந்து, படங்கள் தயாரித்து நடிக்கத் தொடங்கினார். அவர் நடிக்கும் படங்களுக்கு அவரே இசை அமைத்தும் வந்தார். பின்னர் நடிப்பை மட்டும் கவனிக்கத் தொடங்கினார்.

தமிழரசன்

தமிழரசன்

இந்நிலையில் தாஸ் படத்தை இயக்கிய, பாபு யோகேஸ்வரன் இயக்கும் தமிழரசன் படத்தில் நடித்துள்ளார் விஜய் ஆண்டனி. ஷூட்டிங் முடிந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்துவருகின்றன.

இளையராஜா

இளையராஜா

இந்தப் படத்துக்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். அவர் இசையில் விஜய் ஆண்டனி ஒரு பாடலையும் பாடியுள்ளார். இளையராஜா இசையில் பாடியது மற்றும் நடித்தது பற்றி விஜய் ஆண்டனியிடம் கேட்டோம்.

ரசிகன்

ரசிகன்

'இளையராஜா இசையை கேட்டு வளர்ந்தவர்கள்தாம் நாம். நான், சென்னை வர தூண்டுதலா இருந்ததும் அவரோட இசைதான். லட்சம், கோடிக்கணக்கான ராஜா ரசிகர்கள்ல நானும் ஒருத்தன். அவர் இசையை கேட்டே, இசை அமைப்பாளர் ஆகியிருக்கேன்னா, அவர் எவ்வளவு பெரிய ஜாம்பவான்னு புரிஞ்சுக்கலாம்.

பயம்

பயம்

இசை அமைப்பாளரான பிறகு, அவரைப் பார்த்து, நான் உங்க ரசிகன், உங்களாலதான் மியூசிக் டைரக்டர் ஆனேன்னு சொல்லத் தோணலை. அவர் எப்படி எடுத்துக்குவாரோ ன்னு பயம்.

பாடல்

பாடல்

இந்த நேரத்துலதான் 'தமிழரசன்' படம் மூலமா, எல்லாம் அமைஞ்சது. நான் யாரை பெரிய இன்ஸ்பிரேஷனா நினைக்கிறேனோ, அவர் இசை அமைக்கும் படத்துல நான் நடிச்சிருக்கேன். கூடவே ஒரு பாடலையும் பாடினேன்.

சுதந்திரம்

சுதந்திரம்

இந்தப் பக்கம் அவர், அந்தப் பக்கம் நான்... எனக்கு என்ன செய்யன்னே தெரியலை. ஆனா, அவர் முழு சுதந்திரம் கொடுத்தார். என்ன ஸ்டைல்ல பாடணுமோ, அந்த ஸ்டைல்ல பாடுங்கன்னு சொன்னார். வேற எதுவுமே சொல்லலை.

தானா அமைஞ்சது

தானா அமைஞ்சது

பாடி முடிச்சதும் நல்லாருக்குன்னு பாராட்டினார். நான் மிதக்கிற பீலிங்ல இருந்தேன். இதெல்லாம் நடக்கும்னு நினைக்கவே இல்லை. எல்லாம் தானா அமைஞ்சது' என்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X