ஜெகன்மோகன் ரெட்டி தங்கைக்கும் எனக்கும் தொடர்பா?: நடிகர் பிரபாஸ் விளக்கம்

By Siva

ஹைதராபாத்: நான் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளாவை பார்த்ததே இல்லை. இந்நிலையில் அவருக்கும் எனக்கும் இடையே தொடர்பு என்று வதந்தியை பரப்பியுள்ளனர் என தெலுங்கு நடிகர் பிரபாஸ் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு நடிகர் பிரபாஸுக்கும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளாவுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக இணையதளத்தில் ஆபாச செய்தி வெளியானது. இதையடுத்து பொய்யான தகவலை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஷர்மிளா சார்பில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

I never met Sharmila: Prabhas

இந்நிலையில் இது குறித்து நடிகர் பிரபாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கடந்த சில மாதங்களாக என் உடல்நலம் பற்றி பல்வேறு வதந்திகள் பரவுகிறது. என் நலம்விரும்பிகள் என் குடும்பத்தாரை தொடர்பு கொண்டு நான் கோமாவில் இருக்கேனா, படுகாயம் அடைந்துள்ளேனா என்று கேட்டு வருகிறார்கள். இது என் குடும்பத்தை வேதனை அடையச் செய்துள்ளது.

இதற்கிடையே எனக்கும் ஒய்.எஸ். ஆர்.ஷர்மிளாவுக்கும் இடையே தொடர்பு என்று வதந்திகள் பரவியுள்ளது. அவரை நான் பார்த்ததே இல்லை. இந்த வதந்தி பொய்யானது. இதில் சிறிதளவும் உண்மை இல்லை.

முன்பு என் உடல்நலம் பற்றி வதந்தி குறித்து பதில் அளித்தேன். காரணம் பதில் அளித்தாலாவது அது பற்றி பேசமாட்டார்கள் என்று தான். ஆனால் வதந்திகளை கண்டுகொள்ளாமல் இருப்பது தான் நல்லது என்பதை புரிந்து கொண்டேன். ஆனால் பிறரை பாதிக்கும் வதந்தி குறித்து கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. அதனால் தான் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிடுகிறேன். வதந்தியை பரப்புவோர் திருமணமான, தாயான மதிப்புக்குரிய நபரை அவமதிக்கிறார்கள்.

உங்களுக்கு தெரிந்தது போன்று எனக்கு அரசியல் ஆசை இல்லை. வதந்தியை கேட்டு வேதனை அடைந்ததாலும், இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவும் தான் அறிக்கை வெளியிடுகிறேன்.

வதந்தியை பரப்புவோர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X