»   »  நான் சரக்கடிக்கிறதும் இல்ல.. பாய் பிரண்டோடு சுத்தறதும் இல்லை! - அஞ்சலி

நான் சரக்கடிக்கிறதும் இல்ல.. பாய் பிரண்டோடு சுத்தறதும் இல்லை! - அஞ்சலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத் ஓட்டல் ஒன்றில் சரக்கடித்துவிட்டு, தன் மீது மோதிய இளைஞருடன் பெரும் ரகளையில் நடிகை அஞ்சலி இறங்கியதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து, அதற்கு விளக்கம் அளித்துள்ளார் அஞ்சலி.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "என்னை பற்றி தவறாக வதந்திகள் பரவி உள்ளன. நான் வெளிநாட்டுக்கு சென்று படங்களில் பிசியாக நடித்து விட்டு இரு தினங்களுக்கு முன்புதான் ஹைதராபாத் திரும்பினேன்.

போட்டோகிராபர்கள் தொல்லை

போட்டோகிராபர்கள் தொல்லை

இரவு 9 மணிக்கு நண்பர்கள் சிலருடன் ஓட்டலுக்கு சாப்பிட சென்றேன். அப்போது சில போட்டோ கிராபர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டு படம் எடுக்க வேண்டும் என்றார்கள். அவர்களிடம் தனிப்பட்ட முறையில் இங்கு வந்து இருக்கிறேன். சினிமா வேலையாக வரவில்லை. எனவே படம் எடுக்க வேண்டாம் என்று கூறி மறுத்தேன்.

போதை வாலிபர்

போதை வாலிபர்

அத்துடன் ஒரு வாலிபர் போதையில் தொந்தரவு செய்வது போன்றும் நடந்து கொண்டார். அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இது எப்படியோ போலீசுக்கு தெரிந்து போலீசாரும் வந்து விட்டனர். அவர்களிடம் நடந்த விஷயங்கள் சொல்லப்பட்டது. ஹோட்டல் நிர்வாகத்தினர் என்னிடம் வருத்தம் தெரிவித்தனர்.

மதுப் பழக்கம் இல்லை

மதுப் பழக்கம் இல்லை

இந்த நிலையில் உள்ளூர் டி.வி.சேனலில் குடி போதையில் பப்பில் நான் ரகளை செய்ததாக செய்திகள் வெளியிட்டுள்ளனர்.

நான் மது அருந்தியதாக வந்த செய்தி தவறானது. எனக்கு மது குடிக்கும் பழக்கம் இல்லை.

நோ பாய் பிரண்ட்ஸ்

நோ பாய் பிரண்ட்ஸ்

பாய் பிரண்டுடன் சுற்றும் பழக்கமும் கிடையாது. என் மீது வேண்டுமென்றே தவறான நோக்கத்தில் இந்த செய்தியை பரப்பி உள்ளனர். அந்த பப்பின் சி.சி.டி.வி. கேமராவை வேண்டுமானால் ஆய்வு செய்து பாருங்கள். உண்மை தெரியும்," என்று கூறியுள்ளார்.

English summary
Actress Anjali says that she never takes alcohol in parties and no truth in such news.
Please Wait while comments are loading...