For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  திலோத்தமா நீங்க திரும்பவம் அஜீத்துடன் நடிப்பீங்களா… ரசிகர்கள் எதிர்பார்ப்பு

  |

  சென்னை: அஜீத் உடன் மட்டுமல்ல மீண்டும் சினிமாவில் நடிக்கும் ஐடியாவே எனக்கு கிடையாது என்று காதல் மன்னன் நாயகி மானு கூறியுள்ளார். நடிகை மானுவிடம் அஜித்துடன் நடித்த அனுபவம் குறித்து கேட்டதற்கு, அவர் மிகவும் அற்புமான நடிகர் மட்டுமின்றி மிகவும் அற்புதமான மனிதர். அவரின் மிகத்தீவிர ரசிகை நான் என்று கூறியுள்ளார். மீண்டும் அஜீத்தோடு இணைந்து நடிப்பது குறித்து கேட்டதற்கு, இந்த கேள்வியை நான் எதிர்பார்க்கவே இல்லை. சொல்லப்போனால் நான் இதை பற்றி யோசிக்கவே இல்லை என்றும் கூறியுள்ளார்.

  நடிகர் அஜித் நடித்த பல படங்களில் மிகவும் ரொமான்டிக் திரைப்படம் காதல் மன்னன் திரைப்படம். அந்த படத்தில் அத்தனை அழகாக ஸ்மார்ட்டாக இருப்பார் அஜித். அழகுக்கு அழகு சேர்த்தார் போல் இருப்பார் அப்படத்தின் ஹீரோயின் திலோத்தமா என்று செல்லமாக அழைக்கப்பட்ட நடிகை மானு.

  I never thought about acting again-Actress Maanu

  இவர் இப்படத்தின் மூலம் அறிமுகமானாலும் பிறகு வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. இருப்பினும் இன்றும் அவரை அஜித் ரசிகர்கள் அனைவருக்கும் கொண்டாடி வருகின்றனர். அந்த அளவிற்கு அஜித்-மானு ஜோடிப் பொருத்தம் வாவ் என்று சொல்லும் விதத்தில் இருந்தது.

  காதல் மன்னன் திரைப்படத்தில், பரத்வாஜின் இசையில் பாடல்கள் தூள். உனைப் பார்த்த பின்பு தான் நானாக இல்லையே என்ற பாடலை கல்லூரி இளைஞர்கள் இன்றும் முணுமுணுக்கும் சூப்பர் டூப்பர் ஹிட் பாடல். பலரும் அந்தப் பாடலை தங்கள் மொபைலின் காலர் ட்யூனாக வைத்து அலப்பரை செய்கின்றனர்.

  சமீபத்தில், ஒரு நிகழ்ச்சியின் போது மானுவை சந்திக்க நேர்ந்த போது அவரிடம் அஜித் பற்றிய சில கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அஜித்துடன் நடித்த அனுபவம் குறித்து கேட்டதற்கு, அவர் மிகவும் அற்புமான நடிகர் மட்டுமின்றி மிகவும் அற்புதமான மனிதர். அவரின் மிகத்தீவிர ரசிகை நான். அவர் என்னை காதல் மன்னன் படப்பிடிப்பின் போது எப்போதும் என்னிடம் கோபித்துக் கொள்வார்.

  நான் என்னுடைய முழுத் திறமையையும் வெளிக்காட்டவில்லை என்று அடிக்கடி சொல்வார். எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு பெரிய அளவில் ஆர்வமில்லாததால், ஈடுபாட்டுடன் நடிக்கவில்லை. நீ இதற்கு பிறகு நடிப்பில் தொடரப்போவதில்லை என்றாலும், 50% நடிப்பை மட்டும் கொடுக்காமல் உன்னுடைய முழுத் திறமையையும் வெளிக்காட்ட வேண்டும். அதுதான் சரியானது என்பார்.

  அவரின் கோபம் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் என் மீது எடுத்து கொண்ட அக்கறை மிகவும் உன்னதமானது, தூய்மையானது. அவரும் அவரது குடும்பமும் என்றென்றும் சந்தோஷமாகவும், மன நிம்மதியோடும் வாழ கடவுளிடம் பிராத்தனை செய்வேன் என்றார்.

  அஜித்துடன் நடித்த நடிகைகளில் உங்களுக்கு பிடித்த நடிகை யார் என்று கேட்டதற்கு அஜித்-ஷாலினி ஜோடி எனக்கு மிகவும் பிடிக்கும். அவர்கள் இருவரையுமே எனக்கு மிகவும் பிடிக்கும். காதல் மன்னன் படத்திற்கு பிறகு அமர்க்களம் படத்தின் ஷூட்டிங் நடைபெற்றது. என்னை தவிர அதுவும் அதே படப்பிடிப்பு டீம் தான், என்றார்.

  மீண்டும் அஜீத்தோடு இணைந்து நடிப்பீர்களா என்று கேட்டதற்கு, இந்த கேள்வியை நான் எதிர்பார்க்கவே இல்லை. சொல்லப்போனால் நான் இதை பற்றி யோசிக்கவே இல்லை. நான் நடித்து பல வருடங்கள் ஆகிவிட்டன. இனிமேல் இது சரியாக வருமா என்பதும் தெரியவில்லை. இப்போதைக்கு எனக்கு நடிப்பதை பற்றி எந்த ஒரு அபிப்பிராயமும் இல்லை, என்றார். கதாநாயகியாக இல்லையென்றாலும் வேறு ஏதாவது கதாபாத்திரத்தில் அஜீத் படத்தில் நடிப்பீர்களா என்று கேட்டதற்கும், அதே பதிலைத் தான் கூறியுள்ளார் மானு.

  இருப்பினும் எங்கள் தல அஜீத் படத்தில் மறுபடியும் மானு நடிக்க வேண்டும் என்பது தான் அஜீத் ரசிகர்களின் வேண்டுகோள். பொறுத்திருந்து பார்ப்போம், காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

  English summary
  Asked actress Maanu about her experience with Ajith, she is not only a wonderful actor but also a very wonderful person. I was his biggest fan. Asked about acting with Ajith again, I did not expect this question. Manu said, 'I never really thought about it.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X