விஜயுடன் இணைந்து படம் செய்வேன் என்று நினைக்கவில்லை... வம்சி வெளிப்படை
ஹைதராபாத் : நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.
இதையடுத்து வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் விஜய் 66 படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில் வம்சி படிப்பள்ளி விஜய்யுடன் இணைந்து படம் செய்வது குறித்து மனம் திறந்துள்ளார்.

நடிகர் விஜய்
நடிகர் விஜய் தற்போது, நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் இதில் அவருக்கு ஜோடி ஆகியுள்ளார் பூஜா ஹெக்டே. இந்தப் படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளது. இந்த மாதத்திற்குள் இந்த படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்து அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக படத்தை ரிலீஸ் செய்ய சன் பிக்சர்ஸ் முடிவு செய்துள்ளது.

பீஸ்ட் படம்
மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் நடித்து வரும் இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. படத்தின் டைட்டில் லுக் உள்ளிட்டவை வெளியிடப்பட்டு மிகுந்த வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுள்ளது.

விஜய் 66 படம்
இந்தப் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னதாகவே விஜயின் அடுத்த படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. விஜய் 66 படத்தை தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தை தெலுங்கின் முன்னணி இயக்குனர் வம்சி படிப்பள்ளி இயக்க உள்ளார். தமிழ் தெலுங்கில் இந்தப் படம் வெளியாக உள்ளது.

விஜயின் அடுத்த படம்
விஜய்க்கு தெலுங்கிலும் ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர் இந்நிலையில் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக உள்ளது ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது. இதனிடையே தனக்கு விஜய்யை மிகவும் பிடிக்கும் என்று படிப்பள்ளி தெரிவித்துள்ளார்.

விஜய் படம் குறித்து வம்சி
ஆனால் விஜய்யுடன் இணைந்து படம் இயக்குவேன் என்று தான் கனவிலும் நினைத்ததில்லை என்றும் வம்சி தெரிவித்துள்ளார். ஆனால் அது தற்போது சாத்தியப்பட்டு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைவது பெருமையாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

பிரம்மாண்ட பூஜை
படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர் நடிகையர் குறித்த விவரங்களை விரைவில் வெளியிட உள்ளதாகவும் வம்சி குறிப்பிட்டுள்ளார். இந்த படத்தின் பூஜை விரைவில் ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

29 ஆண்டு சினிமா கேரியர்
விஜய் தன்னுடைய சினிமா கேரியரை 29 ஆண்டுகள் நிறைவு செய்து தற்போது 30 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். இதையொட்டி விஜய் ரசிகர்கள் 29 ஆண்டுகள் என்பதை ட்ரெண்டாக்கி வருகின்றனர். இதையொட்டி பல்வேறு தரப்பினரும் விஜய் குறித்த கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். இதையடுத்தே வம்சியும் விஜய் குறித்த தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











