கமல் சாரை மிரட்டினேனா.. மேடையில் செம ஓப்பனாக பேசிய உதயநிதி ஸ்டாலின்.. என்ன சொன்னார் தெரியுமா?

சென்னை: விக்ரம் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உதயநிதி ஸ்டாலின் பேசியது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசன், விஜய்சேதுபதி மற்றும் பகத் ஃபாசில் என ஒவ்வொருத்தருக்கும் வெறித்தனமான காட்சிகளை வைத்து டிரைலரை தெறிக்கவிட்டு இருக்கிறார்.

மேலும், ஒரு காட்சியில் சூர்யா வெள்ளை சட்டையுடன் கையில் கத்தியுடன் இருக்கும் காட்சியை ரசிகர்கள் கண்டு பிடித்து டிரெண்ட் செய்து வருகின்றனர்.

டிரைலர் மற்றும் ஆடியோ லாஞ்ச்

டிரைலர் மற்றும் ஆடியோ லாஞ்ச்

சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் இன்று பிரம்மாண்டமாக விக்ரம் படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில், கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ், விஜய்சேதுபதி, பார்த்திபன், பா. ரஞ்சித், அனிருத், காயத்ரி, உதயநிதி ஸ்டாலின், ராதிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஒரே சினிமா விழா தான்

ஒரே சினிமா விழா தான்

டான் டிரைலர் வெளியீட்டு விழா, நெஞ்சுக்கு நீதி டிரைலர் வெளியிட்டு விழா என ஒரே சினிமா விழாவில் கலந்து கொண்டு வருகிறார் உதயநிதி ஸ்டாலின். இந்நிலையில், அடுத்ததாக இன்று கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவிலும் அவர் கலந்து கொண்டு பரபரப்புக்கு பஞ்சமின்றி பேசி உள்ளார்.

கமல் சாரை நான் மிரட்டினேனா

கமல் சாரை நான் மிரட்டினேனா

கமல் சாரையே மிரட்டினீங்களான்னு கேட்டாங்க.. நான் மிரட்ட மாட்டேன்.. யார் மிரட்டினாலும் பயப்படுற ஆள் இல்லை கமல் சார் என விக்ரம் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசியதும் ஒட்டுமொத்த அரங்கமும் ஆரவாரம் செய்து அதிர்ந்தது. மேலும், அரசியலில் சிறப்பாக செயல்பட்டு வருகிறீர்கள். ஆனால், ஒரு ரசிகனாக எனது கோரிக்கை ஆண்டுக்கு ஒரு படமாவது பண்ணுங்க என கமலிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

ஓடுற டிரைன்ல ஏறியிருக்கேன்

ஓடுற டிரைன்ல ஏறியிருக்கேன்

சமீபத்தில் வெளியாகும் அனைத்து பெரிய படங்களையும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தான் இந்த ஆண்டு வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், கமல்ஹாசன் தயாரித்து நடித்துள்ள விக்ரம் படத்தையும் தமிழ்நாடு முழுவதும் ரிலீஸ் செய்யும் உரிமையை உதயநிதி ஸ்டாலின் வாங்கி உள்ளார். வரும் ஜூன் 3ம் தேதி ரெட் ஜெயண்ட் மூவிஸ் விக்ரம் படத்தை வெளியிட போகிறது. இதுகுறித்து பேசும் போது, ஓடுற டிரைன்ல ஏறியிருக்கேன் என உதயநிதி பேசியதற்கும் அரங்கம் அதிர்ந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X