பிரபல இயக்குநரிடம் அறை வாங்கிய விக்ரம் ஹீரோயின்
ஹைதராபாத்: நடிகை ஒருவரை செட்டில் அறைந்ததாக பிரபல இயக்குநர் தேஜா தெரிவித்துள்ளார்.
பிரபல தெலுங்கு பட இயக்குநர் தேஜா. அவர் இயக்கத்தில் காஜல் அகர்வால் வித்தியாசமாக நடித்த சீதா படம் கடந்த மே மாதம் ரிலீஸாகி தோல்வி அடைந்தது. காஜலின் வித்தியாசமான முயற்சியை ஓவர் ஆக்டிங் என்று விமர்சித்துவிட்டார்கள்.

இந்நிலையில் அந்த படத்தை இயக்கிய தேஜா அண்மையில் அளித்த பேட்டியில் அதிர்ச்சிகரமான விஷயத்தை தெரிவித்துள்ளார். அந்த பேட்டியின்போது அவர் கூறியதாவது,
நான் என் பட ஹீரோயின் ஒருவரை அறைந்திருக்கிறேன். ஒரு காட்சியில் அனிதா ஹஸநந்தனி அழ வேண்டும். வழக்கமாக அது போன்ற காட்சிகளுக்கு ஒரு நாள் முன்பே ஹீரோயினை தயார் செய்வோம். ஆனால் திடீர் என்று அந்த அழுகை காட்சியை படமாக்கினோம். அழுமா அழுமா என்று நான் அனிதாவிடம் மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுத்தேன். அவரோ சார் அழுகையே வரவில்லை என்றார்.
இந்த காட்சியில் அழவில்லை என்றால் நான் உங்களை அறைவேன் என்று சொல்லி நிஜமாகவே அறைந்துவிட்டேன். நான் அறைந்த வேகத்தில் அனிதா அழுக அந்த காட்சியை படமாக்கினோம். நான் அனிதாவை அறைந்ததை பார்த்தவர்கள் இயக்குநர் தேஜா செட்டில் கலைஞர்களை அடிக்கிறார் என்று வதந்தி கிளப்பிவிட்டனர் என்றார்.

தேஜா புதிய படத்தை இயக்க தயாராகி வருகிறார். அந்த படத்திலும் காஜல் அகர்வால் தான் ஹீரோயினாம். சீதா படத்திற்கு முன்பு தேஜா ராணாவை ஹீரோவாக வைத்து இயக்கிய நேனு ராஜா நேனு மந்திரி படத்தின் ஹீரோயினும் காஜல் அகர்வால் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
வருஷமெல்லாம் வசந்தம் படம் மூலம் கோலிவுட் வந்த அனிதா விக்ரமின் சாமுராய் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் இந்தி தொலைக்காட்சி தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார். நாகினி 3 தொடரில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார்.
மேலும் நாச் பாலியே 9 தொலைக்காட்சி நிகழ்ச்சியலும் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவருக்கு பெரிய தொகை கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











