தனுஷ் உடன் மட்டும்தான் நடிக்க பிடிக்கும்.. ஒரே போடாக போட்ட லக்கி பாஸ்கர் நடிகர்!

சென்னை: தனுஷின் நடிப்பில் கடைசியாக ராயன் திரைப்படம் வெளியானது. அவரது 50ஆவது படமான அது சுமாரான வரவேற்பையே பெற்றது. அடுத்ததாக அவர் இட்லி கடை, குபேரா உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார். இவை தவிர்த்து இளையராஜா பயோபிக், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம் என பிஸியான லைன் அப்பில் இருக்கிறார் அவர். இதற்கிடையே அவரை சுற்றி சமீப நாட்களாக சர்ச்சையும் வட்டமடித்துக்கொண்டிருக்கும் சூழலில் அவர் பற்றி லக்கி பாஸ்கர் நடிகர் பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியுள்ளது.

இந்திய அளவில் மிகச்சிறந்த நடிகர் என்ற பெயரை எடுத்திருக்கிறார் தனுஷ். அவர் இந்தப் பெயரை எடுப்பதற்கு ஏகப்பட்ட விலைகளை கொடுத்திருக்கிறார். முக்கியமாக அவர் அளவுக்கு தமிழ் சினிமாவில் உருவ கேலிகளை சந்தித்த நடிகர் ஒருவர் இருக்கமாட்டார் என்பதே பெரும்பாலானவர்களின் கருத்து. ஆனால் அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் தனது பாதையில் தெளிவாக இருந்து; தனக்கான தனி இடத்தை இப்போது பிடித்துவைத்திருக்கிறார். அதன் காரணமாக அவர் மீது ரசிகர்களுக்கு ஒருவித மதிப்பு எப்போதும் உண்டு.

dhanush lucky bhaskar nayanthara

வரிசையாக படங்கள்: அவரது நடிப்பில் கடைசியாக ராயன் வெளியாகி சுமாரான வரவேற்பையே பெற்றது. அந்தப் படத்தை அவர் இயக்கியிருந்தார். அடுத்ததாக சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்துவரும் அவர்; இட்லி கடை என்ற படத்தை தானே இயக்கி நடித்தும்வருகிறார். இவை தவிர்த்து அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், இளையராஜா பயோபிக் உள்ளிட்டவைகளிலும் கமிட்டாகியிருக்கிறார்.

விவாகரத்து: இதற்கிடையே அவர் ரஜினிகாந்த்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற மகன்கள் இருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க கடந்த மாதம் தனுஷுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் சட்டப்பூர்வமாக விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தது சென்னை குடும்ப நல நீதிமன்றம். இதனையடுத்து அவர் இரண்டாவது திருமணம் செய்துகொள்வாரா மாட்டாரா என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது.

தனுஷ் Vs நயன்: இதுஒருபக்கம் இருக்க மறுபக்கம் தனுஷுக்கும் நயன்தாராவுக்கும் இடையே பிரச்னை வெடித்தது. தனுஷை கடுமையாக விமர்சித்து நயன் அறிக்கை வெளியிட; நயன்தாரா, விக்னேஷ் சிவன், நெட்ஃப்ளிக்ஸுக்கு எதிராக தனுஷ் வழக்கு தொடர என இந்தப் பிரச்னை தொடர்ந்தது. சரி பிரச்னை சரியாகும் என்று நினைத்த சமயத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன் ஒரு போஸ்ட் போட்டிருந்தார். அந்தப் போஸ்ட்டை பார்த்த ரசிகர்களோ தனுஷின் விவாகரத்தைத்தான் நயன் விமர்சித்திருக்கிறார் என்று கொந்தளித்தார்கள்.

லக்கி பாஸ்கர் நடிகர்: மேலும் நயனின் அறிக்கைக்கு தனுஷுடன் நடித்த நடிகைகள் பலர் லைக் போட்டிருந்தனர். இதன் காரணமாக அவருடன் நடித்தவர்கள் ரொம்பவே கஷ்டத்தை அனுபவித்துவிட்டார்களோ என்று பலரும் பேசினார்கள். இந்நிலையில் சமீபத்தில் வெளியாகி சக்கைப்போடு போட்ட லக்கி பாஸ்கர் படத்தில் துல்கர் சல்மானுக்கு மகனாக நடித்த ரித்விக் ஒரு பேட்டியில் பேசுகையில் அவரிடம் தொகுப்பாளர், 'உங்களுக்கு யாருடன் நடிக்க பிடிக்கும்' என்று கேட்டார். அதற்கு அவர் தனுஷ் மட்டும்தான் என்று கூறினார். இதனை பார்த்த தனுஷ் ரசிகர்களோ ஒரு குழந்தை நட்சத்திரம் இப்படி சொல்கிறார் என்றால் தனுஷ் அவரிடம் எப்படி பழகியிருப்பார் என்று பெருமிதத்தோடு சொல்லிவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X