ஜோதிகா கண் முன்னே சூர்யாவிற்கு லவ் லெட்டர் கொடுத்தேன்... டான்ஸ் மாஸ்டர் சொன்ன பகீர் தகவல்

சென்னை : ஜோதிகாவின் கண் முன்னே சூர்யாவிற்கு லவ் லெட்டர் கொடுத்ததாக பிரபல பெண் டான்ஸ் மாஸ்டர் ஒருவர் கூறி உள்ள பகீர் தகவல், அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதை கேட்ட பிறகு அனைவரும் கேட்கும் ஒரே கேள்வி, ஜோதிகாவின் ரியாக்ஷன் என்ன என்பது தான்.

அனைவருக்குமே தெரியும், கோலிவுட்டின் மிக பிரபலமான காதல் திருமணம் செய்து கொண்ட நட்சத்திர ஜோடிகளில் ஒருவர் சூர்யா - ஜோதிகா. பல படங்களில் ஒன்றாக நடித்த இவர்கள், பல ஆண்டுகள் காதலித்து பிறகு, 2006 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு சினிமாவிற்கு பிரேக் விட்ட ஜோதிகா, குழந்தைகள் வளர்ந்த பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

சூர்யாவிற்கு லவ் லெட்டர்

சூர்யாவிற்கு லவ் லெட்டர்


அதுவும் பெண்களை மையப்படுத்தும், அனைவரையும் பேச வைக்கும் அழுத்தமான கேரக்டர்களை தேர்வு செய்து மட்டுமே ஜோதிகா நடித்து வருகிறார். அதோடு சூர்யாவுடன் இணைந்து 2டி என்டர்டைன்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் ஜோதிகா. மிக அரிதாக, முக்கிய நிகழ்வுகளின் போது மட்டுமே இவர்கள் தங்களின் குடும்ப போட்டோவை வெளியிட்டு வருகிறார்கள். இந்நிலையில் புதிய தகவலாக, ஜோதிகா கண் முன்னாலேயே தான் சூர்யாவிற்கு லவ் லெட்டர் கொடுத்ததாக நடன இயக்குனர் ஒருவர் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு டான்ஸ் மாஸ்டர்

தெலுங்கு டான்ஸ் மாஸ்டர்

தெலுங்கு சினிமாவின் பிரபல நடன இயக்குனர்களில் ஒருவர் பாபி. இவர் டான்ஸ் மாஸ்டர் பிருந்தாவின் அசிஸ்டென்டாக இருந்தவர். இவர் தமிழ் படங்கள் பலவற்றிலும் பணியாற்றி உள்ளார். பிருந்தா மாஸ்டர் பணியாற்றிய பல படங்களில் இவரும் நடனமாடி உள்ளார். இவர் சமீபத்தில் தெலுங்கு டிவி சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் தான் சூர்யா பற்றி ஓப்பனாக பேசி உள்ளார்.

சூர்யாவை தான் கல்யாணம் பண்ணனும்

அவர் பேட்டியில் கூறுகையில், நான் ஸ்கூல் படிக்கும் போதே சூர்யா என்றால் மிகவும் பிடிக்கும். திருமணம் செய்தால் சூர்யாவை தான் செய்ய வேண்டும் என்னும் அளவிற்கு தீவிரமாக இருந்தேன். அவரின் முதல் படமான நேருக்கு நேர் படத்தில் இருந்தே சூர்யா, சிம்ரனை அப்படி பிடிக்கும். சிம்ரனின் உடை, ஸ்டையில் என அனைத்தையும் பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளேன். சூர்யா-ஜோதிகா நடித்த காக்க காக்க படத்தின் போது ஈசிஆரில் என்னை கொஞ்சம் மாற்றி ஷுட்டிங் எடுத்தார்கள். அப்போது சூர்யாவிடம், உங்களை எனக்கு மிகவும். நான் உங்களை காதலிக்கிறேன் என லெட்டரில் எழுதி சூர்யாவிடமே கொடுத்து விட்டேன்.

சூர்யாவிடம் லவ்வை சொல்லிட்டேன்

சூர்யாவிடம் லவ்வை சொல்லிட்டேன்

முதலில் உங்களிடம் பேச வேண்டும் என சூர்யாவிடம் சொன்னேன். அதற்கு அவரும், சொல்லுங்க பாபி. என்ன விஷயம் என கேட்டார். லெட்டரை அவர் கையில் கொடுத்தேன். என்ன இது. இதில் என்ன இருக்கிறது என சூர்யா கேட்டார். நான் உங்களை லவ் பண்ணுறேன் என கூறி விட்டேன். உடனடியாக செட்டில் இருந்த அனைவரிடமும் அந்த லெட்டரை காட்டி விட்டார். பிருந்தா மாஸ்டர் வந்து, என்ன இது என கேட்டார். சூர்யாவை எனக்கு மிகவும் பிடிக்கும். லவ் பண்ணுகிறேன். அதை அவரிடமே சொல்லி விட்டேன் என்றேன்.

Recommended Video

மேடையில் பேசும் அளவு அரசியல் அறிவு இல்லை | Manikandan speech in Jaibhim Success Meet, Rajakannu
ஜோதிகாவின் ரியாக்ஷன் என்ன

ஜோதிகாவின் ரியாக்ஷன் என்ன

நான் லவ் பண்ணுவதாக சொன்னதும் முதலில் சற்று ஷாக் ஆன சூர்யா, இல்லை பாபி. நான் ஜோதிகாவை காதலிக்கிறேன் என்றார். ஜோதிகாவும், என்ன பாபி இப்படி பண்ணிட்டிங்க. கொஞ்சம் முன்பு சொல்லி இருக்க கூடாதா என்றார். இப்போது கூட ஒன்றும் ஆகவில்லை. நீங்க ஒதுங்கிக் கொள்ளுங்கள் ஜோதிகா. நான் அவரை லவ் பண்ணுறேன் என்றேன் ஜோதிகாவிடம் என சொன்னார் பாபி. இவரின் இந்த பேட்டி வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதை பார்த்து விட்டு, சில்லுன்னு ஒரு காதல் படத்தில் வரும் சீனை போலவே சூர்யா வாழ்க்கையில் நிஜமாகவே நடந்துள்ளதா என பலரும் ஆச்சரியப்பட்டு கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X