கிளுகிளு குத்துப்பாட்டு ஐட்டம் டான்ஸ் - பரபர பைட்டு – ஐ -ஆர் 8

By R VINOTH

சென்னை: நாட்டுல விவசாயிங்களுக்கு எதிரா நடக்குற அக்கிரமத்த மையமா வச்சி எடுத்திருக்குற படம் தான் ஐ-ஆர் 8. ஐஆர் 8 பேர்ல அரிசி இருக்கு அந்த பேர்ல இப்ப படமும் வந்திருக்கு. பரபர ஃபைட்டு கிளுகிளுப்பான குத்துப்பாட்டு ஐட்டம் டான்ஸ் உள்ள இந்தப்படம் இன்னிக்கு ரிலீசாகியிருக்கு.

இன்னிக்கு தமிழ் நாட்டுல விவசாயத்துக்கும் விவசாயிங்களுக்கும் எதிரா பல பிரச்சனைகள் கொழுந்துவிட்டு எரியுது. விவசாயிங்க தன்னோட நெலத்துல விவசாயம் பண்றதுக்கு பேங்க்குல வாங்குன கடன கட்டமுடியாம தற்கொலை பண்ணிக்கிறது, அரசாங்கம் விவசாயிங்களோட நிலத்தை புடுங்கி மீத்தான், ஈத்தேன்னு எரிவாயு எடுக்குறது, ரோடு போடுறதுன்னு பல தொந்தரவுங்க அன்றாடம் இருந்துக்கிட்டு இருக்கு.

I-R 8 Movie Released on Today

விவசாயிங்க படுற கஷ்டத்த பாக்குற நடிகர்களும் இப்போ விவசாயத்தையும் அவங்க படுற கஷ்டத்தையும் மையமா வச்சி படமெடுக்குறத இப்போ ஒரு ட்ரெண்டாவே வச்சிருக்காங்க. இருந்தாலும் படத்த பாக்குற மக்களாவது விவசாயிங்களுக்கு சப்போர்ட் பண்ணி விவசாயிங்களுக்கு ஒத்தாசை பண்ணினாலே தமிழ்நாட்டுல விவசாயம் அழியாம காப்பாத்தலாம். அதெத்தான் இந்தப் படத்துல டைரக்டர் சொல்லியிருக்கார்.

முடிஞ்ச வரைக்கும் நா விவசாயத்தை அழிச்சே தீருவேன், அழிச்ச கையோட அந்த எடத்துல விவசாய நெலத்த பாழ்படுத்துற ஃபேக்டரிய கட்டுவேன்னு ஒத்த கால்ல நின்னு கொக்கரிக்கிறான் வில்லன் ஜே.கே.

வில்லன எதுத்து நிக்கிற நம்ம ஹீரோ அனீபா, ஏன்டா அறிவிருக்காடா ஒனக்கு, சோறு போடுற வெவசாயத்தை அழிச்சிட்டு, அப்புறமா சோத்துக்கு என்னடா பண்ணுவே, ஒனக்கும் சேத்துதான்டா நாங்கள்லாம் வெவசாயம் பண்றோம். அதனால நா வயல்ல எறங்கி நாத்து நட்டே தீருவேன்னு சொல்றான்.

சிச்சுவேஷன் இப்படி உக்கிரமா போய்க்கிட்டு இருக்குறப்போ, ஹீரோ அனீபாவோட தம்பிய வில்லனோட அடியாட்கள் கடத்திட்டு போய் ஒரு பாழடஞ்ச குடோனுக்குள்ள அடச்சி வக்கிறாங்க.

வில்லனோட அடியாட்கள ஃபாலோ பண்ணிட்டு போயி அவங்கள அடிச்சி தொவச்சி தொங்கவிட்டுட்டு தன்னோட தம்பியையும் காப்பாத்தி வயக்காட்டுல எறங்கி நாட்டு நடவு செய்றான் நம்ம ஹீரோ அனீபா. இதாங்க ஐ-ஆர் 8 படத்தோட மொத்த கதையும்.

ஹீரோ அனீபா வில்லனோட அடியாட்களோட மோதுன ஃபைட் சீன எடுக்குறதுக்கு பழனி பக்கத்துலெ உள்ள ஒரு வில்லேஜ்லெ ரொம்ப பிரமாண்டமான குடோன் செட் போட்டு அதுல அந்த ஃபைட் சீனை எல்லாம் எடுத்திருக்காரு இந்தப் படத்தோட ஸ்டண்ட் மாஸ்டரான நாக் அவுட் நந்தா.

இந்தப் படத்துல முக்கியமா 'மச்சான் மச்சான் அங்கெ இங்கெ என்ன பாக்காதே…'. அப்பிடின்னு ஒரு பாட்டு இருக்கு. ரொம்ப பிரமாதம். இந்த குத்துப் பாட்டுக்கு டான்ஸ் சொல்லிக் கொடுத்தது மும்பையில இருக்குற டான்ஸர் அலிஷா தான். இந்தப் படம் இன்னிக்கு ரிலீஸ் ஆயிடிச்சி. நீங்களும் ஒரு வாட்டி தியேட்டருக்கு போயி படத்த பாருங்க.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X