‘பிசாசு 2‘ வில் ஆடையின்றி நடிக்க மறுத்தேன்.. ஆனால், கட்டாயப்படுத்தினாங்க.. ஆண்ட்ரியா தகவல் !
சென்னை : பிசாசு 2 படத்தில் ஆடையில்லாமல் நடிக்க முதலில் மறுப்பு தெரிவித்தேன். ஆனால், படவாய்ப்பு இல்லாததால் ஒகே சொன்னேன் என நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பாடல், நடிப்பு இரண்டிலும் அசத்தி வரும் ஆண்ட்ரியா இயக்குநர் நாஞ்சில் இயக்கும் 'கா' என்ற படத்திலும் நடித்துள்ளார்.
ஆக்ஷன் க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரைலர் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆண்ட்ரியா
கன கச்சிதமான உடல்வாகு... சொக்கவைக்கும் அழகு என இளசுகள் மனதை பஞ்சராக்கியவர் ஆண்ட்ரியா. பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் இவர் அறிமுகமான போதே "யாருடா இந்த பொண்ணு சும்மா நச்சுனு.." என்று அனைவரையும் பேச வைத்தார் ஆண்ட்ரியா.

வரிசையாக பல படங்களில்
முதல் திரைப்படத்தில் கிடைத்த வரவேற்பை அடுத்து ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, ஒரு கல் ஒரு கண்ணாடி, விஸ்வரூபம், தரமணி , வடசென்னை, அரண்மனை1 மற்றும் அரண்மனை 3, மாஸ்டர் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். வடசென்னை படத்தில் இவர் நடித்த சந்திரா கதாபாத்திரம் இவருக்கு ஒரு சிறந்த அங்கீகாரத்தை கொடுத்தது.

பிசாசு 2
துணிச்சலான கதைப்பாத்திரத்தை தேர்வு செய்து நடிக்கும் ஆண்ட்ரியா மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி உள்ள பிசாசு 2 திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் படத்தின் தேவைக்கு ஏற்ப சில காட்சிகளில் ஆடையில்லாமல் ஆண்ட்ரியா நடித்துள்ளார். ஆடையே இல்லாமல் ஒரு காட்சியை எடுக்கலாம் என்று திட்டமிட்டு இருந்தேன். ஆனால், இதை ரசிகர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்ற யோசனை வந்ததால் ஆண்ட்ரியாவை நிர்வாணமாக ஒரு போட்டோ ஷூட் நடத்தியதாக மிஸ்கின் கூறியிருந்தார்.

ஆடையில்லாமல் நடிக்க மறுத்தேன்
இந்நிலையில், நடிகை ஆண்ட்ரியா அளித்துள்ள பேட்டியில், லாக்டவுன் நேரத்தில் கிட்டத்தட்ட ஒரு வருடமாக படவாய்ப்பு இல்லாமல் இருந்தேன். அந்த நேரத்தில் தான் பிசாசு 2 படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆரம்பத்தில் ஆடையின்றி 15 நிமிடம் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் கூறியதால், நடிக்க முடியாது என்று கூறிவிட்டேன். ஆனால் என்னை கட்டாயப்படுத்தினார்கள். அதுமட்டும் இல்லாமல், கதை தரமானதாக இருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன். இதுவரையில்லாத நடிப்பினை மக்கள் இப்படத்தில் பார்ப்பார்கள் என்று கூறியுள்ளார். வரும் ஏப்ரல் 29 மாலை 5 மணிக்கு பிசாசு 2 படத்தின் டீசர் வெளியாகவுள்ளது.


Click it and Unblock the Notifications











