அந்த நடிகையுடன் ஜெயம் ரவிக்கு தொடர்பா?.. ஆர்த்தி மீதுதான் மரியாதை வருகிறதாம்.. ஓபனாக பேசிய சேகுவேரா

சென்னை: நடிகர் ஜெயம் ரவி தனது மனைவியை விவாகரத்து செய்யவிருக்கிறார். அதுகுறித்து அவர் அறிக்கை வெளியிட்டு தனது நிலையை தெளிவுப்படுத்திவிட்டார். அதேபோல் ஆர்த்தியோ தனக்கு தெரியாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தனது பங்குக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். இந்தச் சூழலில் பத்திரிகையாளர் சேகுவேரா ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி குறித்து தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசியிருக்கிறார்.

தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை இப்போது பிரிவில் வந்து நிற்கிறது. கடந்த சில காலமாகவே அவர்கள் இருவருக்குமான உறவு சுமூகமாக இல்லை எப்போது வேண்டுமானாலும் பிரச்னை வெடிக்கலாம் என்ற பேச்சுக்கள் தொடர்ந்து எழுந்தவண்ணம் இருந்தன.

jayam ravi aarthi cheguvera

உறுதி செய்த ரவி: நிலைமை இப்படி இருக்க கடந்த வாரத்தில் ஜெயம் ரவி அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் தன்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டு திருமண வாழ்க்கையிலிருந்து விலகுவதாகவும்; இது நெஞ்சம் கனத்து எடுத்த கடினமான முடிவு என்று கூறி; விவாகரத்து மனுவை தாக்கல் செய்திருக்கிறார். ரவியின் இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த திரைத்துறைக்குமே பெரும் ஷாக்காக இருக்கிறது. ஏனெனில் இதுவரையில் எந்த கிசுகிசுவிலும் சிக்காத நடிகர்களில் ஒருவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்த்தியின் விளக்கம்: இந்தச் சூழலில் ஆர்த்தி அளித்திருந்த விளக்கத்தில், குழந்தைகளின் நலனுக்காக சேர்ந்து வாழவே விரும்புகிறேன். ஜெயம் ரவியிடம் பல முறை பேச முயற்சித்தேன். ஆனால் அதற்கான வாய்ப்பையே அவர் கொடுக்கவில்லை. நானும் குழந்தைகளும் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறோம். ரவியின் இந்த முடிவு தனது கவனத்துக்கே வராமல் எடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறியிருந்தார்.

ஏன் அவசரம்: ஆர்த்தியின் அந்த விளக்கம் பல கேள்விகளை ரசிகர்களிடையே எழுப்பியது. முக்கியமாக ஆர்த்தி பேச முயற்சித்தும் ஏன் ரவி அதற்கான வாய்ப்பை கொடுக்கவில்லை. அமர்ந்து பேசியிருந்திருக்கலாம். குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டிருக்கலாம் என்று பலரும் பேச ஆரம்பித்திருக்கின்றனர். ஆனால் ஜெயம் ரவியோ அந்த அறிக்கைக்கு பிறகு எந்த விதமான ரியாக்‌ஷனையும் கொடுக்கவில்லை. அதேசமயம் இரண்டு பேரையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் சிலர் இறங்கியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

சேகுவேரா பேட்டி: இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் சேகுவேரா இந்த விவகாரம் குறித்து தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தபோது ஜெயம் ரவிக்கும் சோபிதாவுக்கும் தொடர்பு என்று கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அதில் எந்த விதமான உண்மையும் இல்லை. அப்படி உண்மையாக இருந்திருந்தால் நாக சைதன்யா - சோபிதா நிச்சயதார்த்தத்தின்போது அது வெளியே வந்திருக்கும். தேவையில்லாமல் இதில் தனுஷையும் இழுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆர்த்தியின் அறிக்கையில் குழந்தைகளுக்காக சேர்ந்து வாழ விரும்புவதாக தெரிவித்திருக்கிறார். அது நல்ல விஷயம்தான். ஏனெனில் அவர்கள் இருவருக்குமான பிரச்னையில் அடி வாங்கப்போவது என்னவோ குழந்தைகள்தான். ஆனால் ஆர்த்தி அந்த விஷயத்தில் எடுத்திருக்கும் முடிவை பார்க்கும்போது அவர் மீதுதான் எனக்கு மரியாதை வருகிறது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X