மோடியை பெரிதும் மதித்தேன், இப்படி செய்துவிட்டாரே: நடிகை கவுதமி

By Siva

சென்னை: பிரதமர் மோடியை நான் பெரிதும் மதித்தேன். அனைத்து குடிமகன்களும் பிரதமர் முன் சமம் என்றால், ஏன் எனது கேள்வியை பிரதமர் புறக்கணிக்கிறார்? என நடிகை கவுதமி கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி நடிகை கவுதமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி பல கேள்விகளுக்கு பதில் கேட்டிருந்தார். ஆனால் அவருக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை. அவர் கடிதம் எதுவும் எழுதி தங்களுக்கு கிடைக்கவில்லை என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கவுதமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கடிதம்

கடிதம்

முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த சந்தேகம் நிலவுவதைக் குறிப்பிட்டு கடந்த டிசம்பர் 8-ம் தேதி பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதினேன். இது சமூக வலைத் தளங்களிலும் மீடியாவிலும் பலராலும் பகிரப்பட்டது. சமூக வலைத்தளங்கள், மீடியாவைப் பாவிப்பதில் பிரதமர் மோடி மற்ற தலைவர்களை விட முன்னோடியாகத் திகழ்பவர். அப்படிப்பட்டவருக்கு நான் எழுதிய கடிதம் நேரடியாகவும் மீடியா வழியாகவும் தெரிந்த பிறகும் கூட, அதற்கான பதிலை பிரதமரோ, அவரது அலுவலகமோ இது வரை தெரிவிக்கவில்லை.

ஜெயலலிதா

ஜெயலலிதா

இந்த நாட்டின் பிரஜை என்ற முறையில் ஜனநாயக முறைப்படி நான் ஜெயலலிதா மரணத்தால் ஏற்பட்ட வலி மற்றும் சந்தேகத்தை பிரதமருக்குத் தெரிவித்திருந்தேன். பல லட்சம் மக்களுக்குத் தெரிந்த அந்தக் கடிதம், பிரதமரின் பார்வைக்கே போகவில்லை என்பது, குடிமக்களாகிய நம்மைச் சூறையாடுவதற்குச் சமம்.

மோடி

மோடி

பிரதமர் மோடியை நான் பெரிதும் மதித்தேன். அனைத்து குடிமகன்களும் பிரதமர் முன் சமம் என்றால், ஏன் எனது கேள்வியை பிரதமர் புறக்கணிக்கிறார்? தென்னிந்தியா, குறிப்பாக தமிழகம் அனைத்துத் துறைகளிலும் மத்திய அரசால் புறக்கணிக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

உண்மை

உண்மை

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, பலரும் அவரது உடல்நலம் விசாரிக்க நேரில் போய்ப் பார்த்தனர். ஆனால் ஒருவர் கூட அவரது உடல் நிலை பற்றிய உண்மையைத் தெரிவிக்கவில்லை.

துயரம்

துயரம்

தமிழக மக்களின் கேள்விகளுக்கு பதில் மறுப்பதும், ஜெயலலிதாவுக்கு நீதி மறுப்பதும் தமிழக மக்களுக்கு மறுக்கப்படும் நீதியாகும். ஜெயலலிதா மறைவு, வரதா புயல் போன்றவற்றால் தமிழக மக்கள் பெரும் துயரத்தில் உள்ளனர். தமிழக மக்கள் தங்கள் கலாச்சார அடையாளத்தை மீட்டெடுக்க பெரும் போராட்டத்தை நடத்த வேண்டிய நிலையில் உள்ளனர்.

விவசாயிகள்

விவசாயிகள்

அரசு தங்கள் அழுகைக்கு செவி சாய்க்கவில்லை என்ற வேதனையில் பல விவசாயிகள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இத்தகைய துயரங்களுக்குப் பிறகாவது மத்திய அரசிடமிருந்து தமிழக மக்களுக்கு ஆறுதலான செய்தி ஏதாவது வரும் என்று எதிர்ப்பார்த்தோம்.

போராட வேண்டுமா?

போராட வேண்டுமா?


ஒருவரது கேள்விக்கு பதில் கிடைக்க தாமதமானால் பரவாயில்லை... ஆனால் பதிலே கிடைக்கவில்லை என்றால், அந்த குடிமகனுக்கு நாட்டில் பாதுகாப்பில்லை என்று தானே அர்த்தம்...? அதுவும் பொறுப்பிலிருந்த ஒரு முதல்வர் மர்மமான முறையில் இறந்திருக்கிறார். அவர் மரணம் குறித்த தகவல்களை எந்த ஒளிவு மறைவுமின்றி வெளியிட வேண்டுமல்லவா? இதைத் தெரிந்து கொள்ளவும் நாம் தெருவில் இறங்கிப் போராட வேண்டுமோ? என கவுதமி கேள்வி எழுப்பியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X