சச்சின் ஷூட்டிங்கில் தான் விஜய் சாரை மொதல்ல பார்த்தேன்.. இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!
சென்னை: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இப்போது நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார்
அடுத்ததாக மீண்டும் விஜய்யுடன் கூட்டணி வைக்க உள்ளார் என்ற தகவல்களும் வெளிவந்து கொண்டுள்ளது
இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள லோகேஷ் கனகராஜ் விஜய்யை முதன்முதலாக சச்சின் படப்பிடிப்பில் தான் பார்த்ததாக பகிர்ந்துள்ளார்.

குறும்படங்கள் மூலம் இயக்குனராக
தொடர்ந்து ஆக்சன் கதைகளை இயக்கி மிரட்டி கொண்டுள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி முதல் படத்திலேயே ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர். எந்த ஒரு இயக்குனரிடம் உதவி இயக்குனராக பணிபுரியாமல் குறும்படங்கள் மூலம் இப்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உள்ளார்.

கைதி பிளாக்பஸ்டர்
மாநகரம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் அதைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. கார்த்தியின் மிரட்டலான நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி திரையரங்குகளில் சக்கைபோடு போட்டது. மாநகரம் மற்றும் கைதி என இயக்கிய படங்களில் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக ஆனார் லோகேஷ் கனகராஜ்

ப்ரொஃபஸர் கதாபாத்திரத்திலும் மாஸ்
இந்த நிலையில் விஜய்யுடன் கூட்டணி அமைத்த லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தை இயக்கினார். விஜய் இதுவரை பல மாஸான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தாலும் ப்ரொஃபஸர் கதாபாத்திரத்திலும் மாஸ் காட்ட முடியும் என மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். குடிக்கு அடிமையான வாத்தியார் கதாபாத்திரத்தில் விஜய் மிகவும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியது மற்றும் பவானி கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி மிரட்டலாக நடித்திருந்தது என மாஸ்டர் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஒரு படி மேலேயே இருந்தது. விஜய் மற்றும் விஜய் சேதுபதி என இருவரின் நடிப்பும் இந்த படத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது என்றே சொல்லலாம். இருவருக்கும் சரிசமமான திரைக்கதையை லோகேஷ் கனகராஜ் அமைத்திருந்தது இப்படத்திற்கு மேலும் பலமாக இருந்தது.

சச்சின் படப்பிடிப்பில்
அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் தனது கலையுலக குருவான கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் விக்ரம் என்ற படத்தை இயக்கி வருகிறார். முழுக்க முழுக்க ஆக்ஷன் பின்னணியில் உருவாகி வரும் இந்தப் படத்தில் பகத் பாசில் மற்றும் விஜய் சேதுபதி முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். விக்ரம் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து இப்பொழுது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டுள்ளது. இந்நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த லோகேஷ் விஜய் சாரை முதல் முதலாக சச்சின் படப்பிடிப்பில் தான் பார்த்தேன்.

விஜய் சாரை மொதல்ல பார்த்தேன்
அப்போது நான் கோயம்புத்தூரில் காலேஜில் படித்துக் கொண்டிருந்தேன். சச்சின் கிளைமாக்ஸ் ஏர்போர்ட் காட்சி கோயம்புத்தூரில் தான் படமாக்கப்பட்டது. அப்பொழுது நண்பர்களுடன் ஏர்போர்ட் சென்றிருந்தேன் அப்போதுதான் விஜய் சாரை முதல் முறையாக அங்கு பார்த்தேன். அதன்பிறகு மாஸ்டர் படத்தில் பணியாற்றிய போது இந்த தகவலை விஜய் சாரிடம் பகிர்ந்து கொண்டேன் அவரும் ஆச்சரியத்துடன் கேட்டார். என முதல் முறையாக விஜய்யை பார்த்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











