Don't Miss!
- News IQவை டெஸ்ட் செய்யலாமா? இந்த படத்தில் குகை மனிதருக்குள் மறைந்திருக்கும் இன்னொரு மனித முகம்!
- Sports இனி 14 கோடி சிஎஸ்கே வீரருக்கு டாடா பைபை.. பழைய ஆல் - ரவுண்டர் பக்கம் திரும்பிய பிளெம்மிங்
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Finance TikTok: கங்கணம் கட்டுக்கொண்டு சுத்தும் அமெரிக்கா.. 70 லட்சம் நிறுவனங்களுக்கு ஆப்பு..!!
- Automobiles ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
“லாலாவுக்காகத் தான் விட்டுக் கொடுத்தேன்”.. கண்ணீருடன் சாண்டியின் முதல் மனைவி காஜல் வெளியிட்ட வீடியோ!
பிக் பாஸ் பைனலில் பங்கேற்காதது குறித்து சாண்டியின் முதல் மனைவியான காஜல் பசுபதி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
Recommended Video
சென்னை: லாலாவுக்காகத் தான் பிக் பாஸ் பைனலுக்கு தான் போகவில்லை என சாண்டியின் முதல் மனைவி காஜல் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தில் வெற்றி பெற்றவர் நடன இயக்குநர் சாண்டி. பிக் பாஸ் வீட்டில் அவர் இருந்த நாட்களில் எல்லாம் தன் மகள் லாலா பற்றி அவர் பேச மறந்ததில்லை. இதனாலேயே சாண்டியைப் போலவே அவரது மகள் லாலாவும் பிக் பாஸ் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமாகி விட்டார்.
பிக் பாஸ் முதல் சீசன் போட்டியாளரான காஜல், சாண்டியின் முதல் மனைவி ஆகும். முறைப்படி இருவரும் பிரிந்து விட்டனர். தற்போது அவர்களுக்குள் காதல் எதுவும் இல்லையென ஒவ்வொரு பேட்டியிலும் தெளிவாகவே சொல்லி வருகிறார் காஜல்
மீண்டும் சாக்ஷி.. கையில் கோப்பையுடன் தோழி.. பிக் பாஸில் கிடைத்த பேரை கெடுத்துக் கொண்ட ஷெரின்!
டிவிட்டரில் ஆதரவு
அதோடு பிக் பாஸ் சீசன் 3 ஆரம்பமான நாள் முதல் சாண்டிக்கு ஆதரவாக தனது டிவிட்டர் பக்கம் மூலம் வாக்கும் சேகரித்து வந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் நல்ல விமர்சகராகவும் இருந்து வந்தார். ஆனால், நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கிய போது ஏனோ பிக் பாஸ் பார்ப்பதையே நிறுத்தி விட்டதாக கூறி விட்டார்.
புகைப்படம்
ஆனபோதும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து போட்டியாளர்கள் வெளியேறுவது குறித்து மட்டும் அவ்வப்போது சில பதிவுகளை வெளியிட்டு வந்தார். கூடவே சாண்டியின் மகள் லாலாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் அவர் பதிவிட்டார்.
|
வீடியோ
இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 3 பினாலேவுக்கு காஜல் செல்வார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் செல்லவில்லை. அதற்கான காரணம் குறித்து அவர் வீடியோ பதிவு ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
காஜல் உருக்கம்
அதில், ‘பிக் பாஸ் தரப்பில் இருந்து என்னை பினாலேவுக்கு அழைத்திருந்தனர். ஆனால் லாலாவுக்காக நான் விட்டுக் கொடுத்து விட்டேன். அங்கு செல்லப் போவதில்லை' என உருக்கமாக அவர் பேசியுள்ளார். எப்போதும் கம்பீரமாக கலகலப்பாக பேசும் காஜல், அழுவது போன்று சோகமான தொனியில் பேசியது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
டான் ரசிகர்கள்
காஜலை அவரது டிவிட்டர் ரசிகர்கள் டான் என அழைப்பது தான் வழக்கம். காஜலின் இந்த வீடியோவைப் பார்த்து பதறிப் போன அவர்கள், ‘என்னாச்சு.. ஏன் இவ்வளவு சோகம்?' என அக்கறையுடன் விசாரித்துள்ளனர். மேலும் சிலரோ, ‘கவலைப் படாதீங்க டான், பழைய மாதிரி சிரிச்சிட்டே இருங்க' என அறிவுரையும் கூறியுள்ளனர்.