கீர்த்தியின் மகாநதி படம் பார்த்தபோது தூங்கிட்டேன்: பிரபல நடிகை ஓபன் டாக்

By Siva

சென்னை: கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநதி படம் பார்த்தபோது தூங்கிவிட்டதாக பிரபல நடிகை வாணிஸ்ரீ தெரிவித்துள்ளார்.

60கள், 70களில் தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் வாணிஸ்ரீ. அவர் சிவாஜி கணேசனுடன் சேர்ந்து நடித்த வசந்த மாளிகை படம் என்றென்றும் நினைவில் நிற்கும் படமாகும்.

வயதான பிறகு வில்லி கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தியவர் வாணிஸ்ரீ. இந்நிலையில் அவர் மகாநதி படம் குறித்து பேட்டி அளித்துள்ளார்.

தூக்கம்

தூக்கம்

மகாநதி படத்தை பார்த்தேன். ஆனால் இரண்டாம் பாதி சாவித்ரியின் கதையே கிடையாது. அதனால் தூங்கிவிட்டேன். என் வாழ்க்கை வரலாற்றை யாரும் படமாக எடுக்கக் கூடாது. படம் என்றால் டுவிஸ்ட் இருக்க வேண்டும். என் கதையில் ஒரு டுவிஸ்டும் இல்லை. அதனால் தான் அதை படமாக எடுக்கக் கூடாது என்கிறேன் என்றார் வாணிஸ்ரீ.

 சாவித்ரி

சாவித்ரி

நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படம் தான் மகாநதி. அந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் சாவித்ரியாக நடித்திருந்தார். படத்தை பார்த்த அனைவரும் கீர்த்தி சுரேஷின் நடிப்பை புகழ்ந்து தள்ளினார்கள். இந்நிலையில் சாவித்ரியை நன்கு தெரிந்த வாணிஸ்ரீ மகாநதி படம் பற்றி இப்படி தெரிவித்துள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

 பிரபலங்கள்

பிரபலங்கள்

மகாநதி படம் போர் என்று வாணிஸ்ரீ தெரிவித்தாலும் அது அருமையாக இருந்தது என பல பிரபலங்கள் பாராட்டினார்கள். மகாநதி படம் எடுத்ததில் சில சீனியர் நடிகைகளுக்கு வருத்தம் உள்ளது. தங்களிடம் சாவித்ரி பற்றி எதுவும் கேட்காமல் எப்படி படம் எடுக்கலாம் என்று அவர்கள் வருத்தப்பட்டுள்ளனர். வாணிஸ்ரீயோ மகாநதி படத்தின் இரண்டாம் பாதி சாவித்ரியின் கதையே இல்லை என்று தெரிவித்துள்ளார்.

 கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்

மகாநதி படத்தில் நடித்ததை நினைத்து கீர்த்தி சுரேஷ் பெருமைப்பட்டுள்ளார். இந்நிலையில் வானிஸ்ரீ இப்படி சொல்லிவிட்டாரே. மகாநதி படம் ஜெமினி கணேசன் குடும்பத்தாருக்கு பிடிக்கவில்லை. ஆனால் சாவித்ரியின் மகளுக்கு பிடித்திருந்தது. கீர்த்தி தற்போது பாலிவுட் படத்திற்காக உடல் எடையை குறைத்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஒல்லிக்குச்சியாக மாறி ஆளே அடையாளம் தெரியாதபடி உள்ளார். இந்த ஒல்லியான கீர்த்தியை பார்க்கவே முடியவில்லை, தயவு செய்து வெயிட் போடுங்க என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X