பெரும் விலைக்கு விற்கப்பட்ட ஐ.. தமிழ் சினிமாவில் புது சாதனை
ஷங்கரின் மெகா படமான ஐ மிகப் பெரிய விலைக்கு கைமாறியுள்ளது. சுஷ்மா சினி சர்க்யூட் நிறுவனம் இதன் வெளியீட்டு உரிமையைப் பெற்றுள்ளது.
ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில் விக்ரம் - எமி ஜாக்ஸன் நடித்துள்ள படம் ஐ. 150 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரமாண்டமாக நடந்தது. ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஷ்வார்ஷநெகர் தலைமையில் ரஜினிகாந்த் இதனை வெளியிட்டார்.

விற்பனை
ஆடியோ வெளியான கையோடு படத்தின் வியாபாரத்தை ஆரம்பித்த ஆஸ்கார் ரவிச்சந்திரன், இதுவரை எந்தத் தமிழ்ப் படமும் போகாத விலைக்கு இந்தப் படத்தை விற்றுள்ளார்.

சுஷ்மா பிலிம் சர்க்யூட்
தமிழகத்தில் படத்தை வெளியிடும் உரிமை, பலத்த போட்டிக்கிடையில் சுஷ்மா சினி சர்க்யூட் நிறுவனத்துக்கு கிடைத்துள்ளது. மிகப் பெரிய விலைக்கு தரப்பட்டுள்ளது. ஆனால் தொகை எவ்வளவு என்பதைச் சொல்ல ஆஸ்கார் ரவிச்சந்திரன் மறுத்துவிட்டார்.

ஆந்திரா உரிமை
ஆந்திராவில் இந்தப் படத்தை வெளியிடும் உரிமை ஆர் பி சவுத்ரியின் மெகா சூப்பர் குட் பிலிம்ஸ் மற்றும் திருப்பதி பிரசாத்துக்கு கிடைத்துள்ளது. இதுவரை எந்த டப்பிங் படமும் பெறாத பெரும் தொகையை இந்தப் படம் பெற்றுள்ளது.

நவம்பர்
இந்தப் படம் முதலில் தீபாவளிக்கு வெளியாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால் இப்போது நவம்பருக்கு தள்ளிப் போகும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications











