அந்த அதிர்ச்சி சம்பவத்திற்கு பிறகு நான் என் பெயரை கூகுள் செய்வது இல்லை: கார்த்தி ஹீரோயின்
மும்பை: தன்னுடைய கவர்ச்சி புகைப்படம் வந்ததால் தன்னை பற்றி கூகுள் செய்வதை நிறுத்திவிட்டதாக நடிகை அதிதி ராவ் ஹைதரி தெரிவித்துள்ளார்.
கார்த்தியின் காற்று வெளியிடை படம் மூலம் கோலிவுட்டில் பிரபலமானவர் பாலிவுட் நடிகை அதிதி ராவ் ஹைதரி. அதன் பிறகு செக்கச் சிவந்த வானம் படத்திலும் நடித்த அவர் தற்போது உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக சைக்கோ படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் அதிதி டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கூறியிருப்பதாவது,
ஒரு முறை நான் என்னை பற்றி கூகுள் செய்தேன். அப்பொழுது என் முதல் படத்தில் பேக்லெஸ்ஸாக இருந்த புகைப்படம் உள்ளிட்ட சில மோசமான புகைப்படங்கள் வந்தது. அதில் இருந்து நான் என்னை பற்றி கூகுள் செய்வதை நிறுத்திவிட்டேன் என்றார்.
மிஷ்கின் இயக்கி வரும் சைக்கோ படம் வித்தியாசமானது மட்டும் அல்ல தனக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுக்கும் என்று நம்புகிறார் அதிதி. பாலிவுட் நடிகைகள் பேக்லெஸ்ஸாக போஸ் கொடுப்பது எல்லாம் சகஜம்.
அப்படி இருக்கும்போது அதிதி அத்தகைய புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் என்றால் நம்பும்படி இல்லையே என்கிறார்கள் நெட்டிசன்கள்.


Click it and Unblock the Notifications











