twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'இந்த' இரு பெரிய ராட்சச வண்டிகளுக்கு நடுவில் சிக்கியுள்ளேன் : விவேக் கவலை!

    எழுமின் திரைப்படம் வரும் 18ம் தேதி திரைக்கு வருகிறது.

    |

    Recommended Video

    சண்டக்கோழி 2 விஷாலா? வடசென்னை தனுஷா? இல்ல நானா? : விவேக் வைரல் வீடியோ

    சென்னை: சண்டக்கோழி 2, வடசென்னை எனும் இரண்டு ராட்சசன்களுக்கு நடுவில் மாட்டிக்கொண்டதாக நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.

    வையம் மீடியாஸ் நிறுவனம் சார்பில் வி.பி.விஜி தயாரித்து இயக்கி இருக்கும் படம் 'எழுமின்'. நடிகர் விவேக், தேவயானி, அழகம்பெருமாள், பிரேம் உள்ளிட்டவர்களுடன் ,தற்காப்பு கலையில் நிபுணத்துவம் பெற்ற 6 சிறுவர் சிறுமிகளும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

    இப்படம் வரும் 18ம் தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். இதில் நடிகர் விவேக், இயக்குனர் வி.பி.விஜி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, கணேஷ் சந்திரசேகர், நடிகர் ரிஷி, ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஷ்வரன், கலை இயக்குனர் ராம், சிறுவர்கள் பிரவீன், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கிர்த்திகா, தீபிகா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

    [டிக்கெட் விலையில் ரூ.15 தள்ளுபடி.... பள்ளி பள்ளியாகச் சென்று டோக்கன் தரும் 'எழுமின் ' படக்குழு!]

    செய்தியாளர்களிடம் விவேக்

    செய்தியாளர்களிடம் விவேக்

    செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விவேக், பெரிய ராட்சச வண்டிகளில் வரும் விஷால், தனுஷ் ஆகியோருக்கு இடையில் தான் சிக்கிக்கொண்டதாகக் கூறினார்.

    அக்டோபர் 18ல் எழுமின்

    அக்டோபர் 18ல் எழுமின்

    இதுகுறித்து அவர் பேசியதாவது,
    " எழுமின் திரைப்படம் அக்டோபர் 18-ம் தேதி திரைக்கு வருகிறது. அந்த தேதியை சொன்னதும் எல்லோர் முகத்திலும் ஒரு பரவசம் தெரிந்தது. ஏனென்றால் அன்று புரட்டாசி முடிகிறது.

    வில்லன் ரிஷி

    வில்லன் ரிஷி

    இந்தப்படத்தைப் பற்றி ஏற்கெனவே நிறைய பேசிவிட்டோம். இன்னைக்கு ஹீரோவை காட்டிலும் வில்லனுக்கு நிறைய பேர் கிடைக்கிறது. அதுபோல் இப்படத்தின் வில்லன் ரிஷிக்கும் பேர் கிடைக்கும். ஏனென்றால் இந்த பசங்களிடம் அவர் நிஜமாகவே அடிவாங்கினார்.

    படத்தின் நோக்கம்

    படத்தின் நோக்கம்

    ஒவ்வொரு படத்திற்கும் வணிகம் லாபம் என பல நோக்கம் இருக்கும். இந்தப்படத்தில் மாணவர்களுக்கு ஒரு நல்ல விஷயத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என்று நினைத்தார்கள். அதைச் செய்து இருக்கிறார்கள். இந்தப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருமான விஜி, டெக்னாலஜி விஷயங்களை மிக வேகமாக கற்றுக்கொள்ளும் திறன் உள்ளவர்.

    உண்மையான ஹீரோ

    உண்மையான ஹீரோ

    இந்தப்படத்தின் உண்மையான ஹீரோ யார் என்றால் இந்த படத்தில் நடித்த மாணவர்கள் தான். அவர்களோடு நான் நடித்திருப்பது மகிழ்ச்சி. மேலும் இப்படத்தில் மிக முக்கியமானவர்கள் இசை அமைப்பாளர் கணேஷ் சந்திரசேகர், ஸ்டண்ட் மாஸ்டர் கேமராமேன் இவர்கள் தான். பின்னணி இசைக்காக மட்டும் ஸ்ரீகாந்த் தேவாவை அணுகினோம். அவர் பெரிய மனதோடு சம்மதித்தார்.

    பெரிய ராட்சச வண்டிகள்

    பெரிய ராட்சச வண்டிகள்

    18-ம் தேதி ‘வடசென்னை', ‘சண்டக்கோழி' என இரண்டு பெரிய படங்கள் வருகிறது. தனுஷும், விஷாலும் பெரிய ராட்சச வண்டிகளில் வருகிறார்கள். இவர்களோடு நாங்களும் வருகிறோம். இப்போது நான் இந்த பெரிய ராட்சச வண்டிகளுக்கு நடுவில் சிக்கியுள்ளேன்.

    மாணவர்கள் வர வேண்டும்

    மாணவர்கள் வர வேண்டும்

    ஆனால் தயாரிப்பாளர் இப்படத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார். மக்கள் நிச்சயம் நம்மை ஆதரிப்பார்கள் என நம்புகிறார். இந்தப்படத்தை பார்க்க மாணவர்கள் வரவேண்டும்" என அவர் கேட்டுக்கொண்டார்.

    English summary
    Actor Vivek said that he is struck in between two giants, Vishal and Dhanush.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X