களவாணி நான் பண்ண வேண்டிய படம்... வருத்தத்தில் பி வாசுவின் மகன்!
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்த இயக்குநர் பி வாசுவின் மகன் ஷக்தி தமிழில் கதாநாயகனாக பல படங்களில் நடித்துள்ளார்
தொட்டால் பூ மலரும் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து அறிமுகமான ஷக்தி அதைத் தொடர்ந்து மகேஷ் சரண்யா மற்றும் பலர், நினைத்தாலே இனிக்கும், ஆட்டநாயகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்
சின்னத்திரையிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பரபரப்பை ஏற்படுத்திய ஷக்தி களவாணி படம் நான் நடிக்க வேண்டியது என வருத்தத்துடன் தெரிவித்து உள்ளார்

தொட்டால் பூ மலரும்
தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் பல வெற்றிப் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக இருந்த இயக்குனர் பி வாசு ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, கார்த்திக், சத்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து பணியாற்றி உள்ளார்.
பி வாசுவின் மகன் ஷக்தி தமிழ் சினிமாவில் பிரபலமான ஹீரோவாக உள்ளவர். 2007 ஆம் ஆண்டு வெளியான தொட்டால் பூ மலரும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமானார்.

தொடர் வெற்றி
இந்த படத்தை எழுதி இயக்கி தயாரித்தும் இருந்தார் பி வாசு . முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை ஈர்த்த நடிகர் ஷக்தி அதைத் தொடர்ந்து மகேஷ் சரண்யா மற்றும் பலர், ஆட்டநாயகன், நினைத்தாலே இனிக்கும் என தொடர் வெற்றி படங்களை கொடுத்தார். சாப்டான கதாநாயகனாக இருந்து ஆட்ட நாயகன் படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக மாறிய ஷக்திக்கு அந்த படம் பெரிதாக கைகொடுக்கவில்லை.

ஆக்ஷன் ஹீரோ கைகொடுக்கவில்லை
ஆட்ட நாயகனுக்கு பிறகு ஷக்தி நடித்த திரைப்படங்கள் பெரிதாக ஓடாததால் இப்பொழுது திரைப்படங்களில் நடிக்காமல் சினிமாவிலிருந்து சற்று விலகி உள்ளார் . இந்த நிலையில் பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு மக்கள் ஆசிர்வாதத்துடன் மீண்டும் படங்களில் வலம் வரலாம் என நினைத்த ஷக்திக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் எதிர்மாறாக நடந்தது . ஷக்தி நடந்துகொண்ட விதம் ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான கருத்துக்களை பெற்றது. ஷக்தி எப்பேது கம்பேக் கொடுப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்

சரியாக ஓடவில்லை
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய ஷக்தி சாப்டான ஹீரோவாக வலம் வந்து கொண்டிருந்த நான் ஆட்ட நாயகன் மூலம் ஆக்ஷன் அவதாரம் எடுத்தேன். அந்த படத்தை லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரித்தனர் . ஆட்டநாயகனுக்கு முன் லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் ஏதோ பெரிய படங்கள் எதுவும் சரியாக ஓடாததால் ஆட்டநாயகன் படத்திற்கு செய்யவேண்டிய செலவுகளை செய்ய தயாரிப்புக் குழு தயங்கியது. ரொம்பவே நல்ல கதை கொஞ்சம் தாராளமாக தயாரிப்பு நிறுவனம் செலவு செய்திருந்தால் இந்த படம் சூப்பராக வந்திருக்கும்.

களவாணி நான் பண்ண வேண்டிய படம்
அதேசமயம் ஆட்ட நாயகன் எடுக்க ரொம்பவே தாமதமானது அதனால் என்னுடைய நாட்களும் வீணாய் போனது. ஆட்டநாயகன் படத்திற்கு ஒப்புக்கொண்ட நாட்களை விடவும் அதிக நாட்கள் அப்படத்திற்கு ஆனது. அதனால் நான் நடிக்க இருந்த களவாணி,நெஞ்சிருக்கும் வரை, தம்பி கோட்டை உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடிக்க முடியாமல் போனது. களவாணி படத்தில் நடித்திருந்தால் கட்டாயமாக என்னுடைய வாழ்க்கை வேறு மாதிரி இருந்திருக்கும் என நடிகர் ஷக்தி வருத்தத்துடன் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











