ரெண்டு பெக்குக்கு மேல முடியல பாஸ்... நம்ம கெப்பாசிட்டி அவ்ளோதான்... ஷாக் கொடுத்த ஹீரோயின்!
Recommended Video
கொச்சி: ரெண்டு பெக் போட்டால் அதிகமாகப் பேசுவேன் என்று மலையாள நடிகை வீணா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மலையாள நடிகை, வீணா நந்தகுமார். மும்பையை சேர்ந்த இவர் ஆசிப் அலி ஜோடியாக நடித்த, கெட்டியோளனு என்ட மலகா (Kettiyolanu Ente Malakha) என்ற மலையாளப் படம் சமீபத்தில் வெளியாகி ஹிட்டாகியுள்ளது.

இதற்கு முன், கடம் கதா, ககுல்தாலியே கோழிபோரு ஆகிய படங்களில் இவர் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியின்போது, கூறிய விஷயங்கள் ஷாக் ஆக்கியிருக்கிறது கேரள ரசிகர்களை.
'நான் ரொம்ப பேசணும்னா, கல்பா ரெண்டு பெக் போடணும். அப்படின்னா நல்லா பேசிட்டே இருப்பேன். ஓவராவும் பேசுவேன். ரெண்டு பெக்குக்கு மேல முடியாது. என்னோட கெப்பாசிட்டி அவ்வளவுதான். இப்பலாம் உடம்பு தாங்க மாட்டேங்குது' என்று வெளிப்படையாகப் பேசி அதிர்ச்சிக் கொடுத்தார்.
பிறகு, சமீபகாலமாதான் இதையெல்லாம் ஆரம்பிச்சிருக்கேன். எனக்கு கூல் பீர் ரொம்ப பிடிக்கும்... ஹாட் அடிச்சா, சில நேரம் ஒரு பெக்குலயே ஓவரா பேசிருவேன்...' என்ற வீணா, தனது காதல்கள் பற்றியும் சொன்னார்.
எனக்கு நாலு காதல் இருந்தது. ஒரு கட்டத்துல இது கஷ்டம்னு முடிவு பண்ணினதும் நாங்களாவே பரஸ்பரம் பேசி பிரிஞ்சுட்டோம் என்று தெரிவித்துள்ளார் இந்த நடிகை.


Click it and Unblock the Notifications











