எனக்கு தெரிஞ்சு அந்த ஹீரோதான் சூப்பரான லவ்வர் பாய்.. பிரமாதமா இருக்கார்.. நடிகை ராஷி கண்ணா கணிப்பு

By

சென்னை: எனக்கு தெரிந்து சூப்பர் லவ்வர் பாய் அந்த ஹீரோதான் என்று நடிகை ராஷி கண்ணா தெரிவித்துள்ளார்.

'அர்ஜுன் ரெட்டி' விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்துள்ள படம், வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்.

தெலுங்கு, தமிழில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தில் நான்கு கெட்டப்பில் வருகிறார் விஜய் தேவரகொண்டா.

4 ஹீரோயின்கள்

4 ஹீரோயின்கள்

அவர் ஜோடியாக, ராஷி கண்ணா, கேத்தரின் தெரசா, இஷபெல், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய 4 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். கிராந்தி மாதவ் இயக்கி இருக்கும் இந்தப் படத்துக்கு கோபி சுந்தர் இசை அமைத்துள்ளார். படம் வரும் 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று தமிழ், தெலுங்கில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

ஒவ்வொரு ஹீரோயின்

ஒவ்வொரு ஹீரோயின்

இதன் பர்ஸ்ட் லுக்கை படக்குழு வித்தியாசமாக வெளியிட்டது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஹீரோயின் லுக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். ஒவ்வொரு லுக்கிலும் விஜய் தேவரகொண்டா வித்தியாசமாக இருந்தார். ரசிகர்களிடம் அந்த போஸ்டர்கள் வரவேற்பை பெற்றன. இதில் விஜய் தேவரகொண்டா மனைவியாக, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.

வசனங்கள்

வசனங்கள்

இந்நிலையில், இந்தப் படத்தின் தமிழ் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. தெலுங்கில் கடந்த சில மாதங்களுக்கு முன்பே, டீசர் வெளியானது. இந்த டிரைலர் அர்ஜூன் ரெட்டி படத்தை போலவே இருப்பதாக ரசிகர்கள் கருத்துத் தெரிவித்தனர். இந்நிலையில், தெலுங்கு டீசர் கடும் விமர்சனத்துக்கும் உள்ளானது. அதில், சில வல்கரான, வெறுக்கத்தக்க வசனங்கள் இடம்பெற்றிருந்ததாம்.

ராஷி கண்ணா

ராஷி கண்ணா

தமிழ் ரசிகர்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று இங்குள்ள டீசரில் அதை மாற்றி வெளியிட்டனர். இந்நிலையில் இந்தப் படத்தில் நடித்துள்ள ராஷி கண்ணா, படம் பற்றி செய்தியாளர்களிடம் பேசினார். இந்தப் படத்தில் அவர் யாமினி என்ற கேரக்டரில் நடித்துள்ளார். இதில் நடிக்க முதலில் பயந்தேன் என்று தெரிவித்துள்ளார். இவர் தமிழில் அடங்கமறு, அயோக்யா படங்களில் நடித்திருந்தார்.

யாமினி கேரக்டர்

யாமினி கேரக்டர்

அவர் மேலும் கூறும்போது, யாமினி கேரக்டர் பற்றி அதிகம் பேச இயலாது.இதில் நடிக்கும் போது எனது கேரக்டரிலேயே நடிப்பது போல உணந்தேன். இதற்கு முன் நான் நடித்த படங்களில் இருந்து இது வித்தியாசமானது. யாமினி கடினமான கேரக்டர் என்பதால் முதலில் பயந்தேன். இப்போது படத்தில் பார்க்கும்போது சிறப்பாக வந்திருக்கிறது.

சரியான லவ்வர் பாய்

சரியான லவ்வர் பாய்

இந்தப் படத்தின் கதாபாத்திரத்துக்கு விஜய் தேவரகொண்டா சரியாக பொருந்தி இருக்கிறார். எனக்கு தெரிந்து சினிமாவில் சரியான லவ்வர் பாய் அவர்தான். சிறிது இடைவெளிக்குப் பிறகு தனக்கு தோதான கேரக்டருக்கு திரும்பி இருக்கிறார் அவர். இந்தப் படத்தில் என்னுடன் நடித்த மற்ற ஹீரோயின்களும் சிறப்பாக நடித்துள்ளனர் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X