அஜித் சினிமாவை விட்டு போய்டுவாருன்னு நினைச்சேன்!
சென்னை : கமர்ஷியல் காமெடி ஹிட் படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் சுந்தர் சி
இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் உள்ள சுந்தர் சியின் நடிப்பில் வெளியான பல படங்கள் வெற்றி பெற்றது அந்த வகையில் தலைநகரம் படத்தின் தொடர்ச்சியாக அதன் இரண்டாவது பாகம் தற்போது உருவாகிறது.
இந்த நிலையில் நடிகர் அஜித் சினிமாவை விட்டு சென்று விடுவார் என நினைத்ததாக சுந்தர் சி பேசியுள்ளார்.

இப்பொழுது ஹீரோவாக
தமிழ் சினிமாவில் கலகலப்பான காமெடி படங்களை இயக்கி இயக்குனராக முன்னணியில் இருப்பவை இயக்குனர் சுந்தர் சி. அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து பணியாற்றி உள்ள சுந்தர் சி இப்பொழுது ஹீரோவாகவும் வலம் வந்து கொண்டுள்ளார். சுந்தர் சி இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் அரண்மனை 3.

சுமாரான வெற்றி
அரண்மனை 1 மற்றும் 2 என இரண்டு பாகங்களும் ஹாரர் கதைகளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஹிட்டடித்த. அதன் தொடர்ச்சியாக அரண்மனை3 வெளியானது இந்தப் படத்தில் ஆர்யா, சாக்ஷி அகர்வால், ராசிகன்னா, ஆண்ட்ரியா என மூன்று கதாநாயகிகள் நடித்திருந்தாலும் படம் ரசிகர்களை அந்த அளவுக்கு கவரவில்லை சுமாரான வெற்றியை மட்டுமே பெற்றது.

தலைநகரம் இரண்டாவது பாகம்
இயக்குனராக தனி இடத்தை பிடித்த சுந்தர் சி ஹீரோவாகவும் இப்பொழுது ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்துள்ளார். தலைநகரம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமான சுந்தர் சி அதைத் தொடர்ந்து சண்டை, ஆயுதம் செய்வோம் டீ பெருமாள் வீராப்பு, முத்தின கத்திரிக்கா, முரட்டுக்காளை,இருட்டு என தொடர்ந்து வித்தியாசமான கதைகளில் நடித்து வெற்றிகரமான ஹீரோவாக வலம் வந்து கொண்டுள்ளார். சுந்தர் சி யின் நடிப்பில் தலைநகரம் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது.

சினிமாவை விட்டு விலகும் எண்ணத்தில் அஜித்
அஜித் நடிப்பில் வெளியான உன்னைத்தேடி என்ற படத்தை இயக்கி இருந்த சுந்தர் சி பேட்டி ஒன்றில் அஜித் சினிமாவை விட்டு போய் விடுவாய் என நினைத்தேன் என அதில் கூறியுள்ளார். உன்னை தேடி படப்பிடிப்பில் இருக்கும் பொழுது அஜித்திற்கு முதுகு தண்டுவடத்தில் மிகப் பெரிய பிரச்சினை இருந்தது அதனால் தன்னால் தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்த முடியவில்லை. சினிமாவை விட்டு விலகும் எண்ணத்தில் அஜித் இருந்துள்ளார் .

அஜித்தின் வளர்ச்சி பிரமிப்பு
ஆனால் இல்ல சார் நீங்க தொடர்ந்து படங்கள் பண்ணுங்க ரசிகர்களுக்கு உங்கள ரொம்ப பிடிச்சு போச்சு என நாங்கள் கூறினோம். அப்படி இருந்த அஜித் இப்பொழுது எட்டியுள்ள உயரம் என்பது அசாத்தியமானது . அஜித்தின் வளர்ச்சியை பார்த்து ரொம்பவும் பிரமித்துப் போய் உள்ளேன் என சுந்தர் சி அஜித் குறித்து பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











