25 பெண்களுக்கு தாலி கட்டியிருக்கிறேன்.. அதற்காக? சத்யராஜ் கேட்ட கேள்வி?
சென்னை: பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் பிரம்மாண்ட காதல் காவியமாக உருவாகி உள்ள ராதே ஷ்யாம் திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.
இந்நிலையில், அந்த படத்தின் ரிலீஸ் தொடர்பான புரமோஷன் பிரஸ்மீட் சென்னையில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
UV கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த படத்தை தமிழில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. அதன்காரணமாக உதயநிதி ஸ்டாலின் நேற்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் நடிகர் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

பிரபாஸின் அடுத்த பிரம்மாண்டம்
200 கோடிக்கு கம்மி பட்ஜெட்டில் நடிக்கவே மாட்டேன் என்கிற வைராக்கியத்துடன் வலம் வரும் ஹீரோ போலவே பிரம்மாண்ட நடிகராக மாறிவிட்டார் நடிகர் பிரபாஸ். பாகுபலி படம் உலகளவில் பிரபாஸின் மார்க்கெட்டை உயர்த்திய நிலையில், அவர் நடிப்பில் உருவாகி உள்ள ராதே ஷ்யாம் திரைப்படம் வரும் மார்ச் 11ம் தேதி திரைக்கு வருகிறது.

பிரஸ்மீட்
இந்த வருடத்தில் ரசிகர்களிடம் எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிற வைத்துள்ள பிரமாண்டமான படங்களில் ஒன்று ராதே ஷ்யாம், UV கிரியேஷன்ஸ் பேனரில் வம்சி மற்றும் பிரமோத் தயாரிப்பில், ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில், பிரபாஸ், பூஜா ஹெக்டே நடித்துள்ள இந்த படத்தின் தமிழ் பதிப்பிற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.

கட்டப்பா பங்கேற்பு
இவ்விழாவினில் நடிகர் சத்யராஜ், சிபிராஜ், உதயநிதி, தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி, உட்பட்ட தமிழ் பிரபலங்களுடன், ராதே ஷியாம் படக்குழுவினர் பிரபாஸ், பூஜா ஹெக்டே, இயக்குநர் ராதா கிருஷ்ண குமார், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, பாடலாசிரியர் மதன் கார்கி தயாரிப்பாளர் பிரமோத் ஆகியோர் கலந்துகொண்டனர். பாகுபலி படத்தில் கட்டப்பாவாக நடித்த சத்யராஜ் இந்த படத்தில் சாமியாராக நடித்துள்ளார்.

25 ஹீரோயினுடன் கல்யாணம்
பிரபாஸை நாங்கள் டார்லிங் என சொல்வோம், பூஜா டார்லிங்கின் டார்லிங், கடவுள் நம்பிக்கை இல்லாமல் கைரேகை நிபுணராக நடித்திருக்கிறேன் என கேட்கிறார்கள், பெரியார் படத்தில் நான் வாழ்ந்திருக்கிறேன், ஜெர்ஸி படத்தில் கிரிக்கெட் கோச்சாக நடித்திருக்கிறேன் அப்படிதான் எடுத்து கொள்ள வேண்டும், நான் ஹீரோவாக நடிக்கும் போது 25 ஹீரோயினை கல்யாணம் செய்திருக்கிறேன், அதை என்ன சொல்வது. நடிப்பை நடிப்பாக மட்டும் எடுத்துகொள்ள வேண்டும் என தனக்கே உரிய பாணியில் நக்கல் கலந்து பேசி அரங்கையே அதிர செய்தார் சத்யாராஜ்.

ஜேம்ஸ் கேமரூன் வந்திருக்கணும்
மேலும், சத்யராஜ் பேசுகையில், இந்தப்படம் மிக அழுத்தமான காதல் கதை, பிரபாஸ் பறந்து பறந்து சண்டை போடுவார் என்றால், இதில் கப்பலே பறக்கிறது. இங்கு ஜேம்ஸ் கேமரூன் தான் வந்திருக்க வேண்டும். அவ்வளவு பிரமாண்டமாக இருக்கிறது. பிரபாஸின் அழகுக்காகவே எடுக்கப்பட்ட படம் இது ஒவ்வொரு காட்சியும் அவ்வளவு அழகாக இருக்கிறது என்றார்.

பான் இன்டர்நேஷனல்
பாகுபலிக்கு பிறகு பிரபாஸுக்கு முக்கியமான பொறுப்பு வந்துள்ளது. பான் இந்தியா என்று எல்லா ஸ்டேட்டிலிருந்து ஒரு நடிகரை போட்டு எடுக்கிறார்கள், ஆனால் இந்தப்படம் உண்மையில் பான் இண்டர்நேஷனல் படம். உங்கள் அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும் என நன்றி கூறி தனது உரையை முடித்துக் கொண்டார்.

சூர்யா படத்திலும்
மார்ச் 10ம் தேதி பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள எதற்கும் துணிந்தவன் படத்திலும், மார்ச் 11ம் தேதி பிரபாஸ் நடிப்பில் வெளியாக உள்ள ராதே ஷ்யாம் படத்திலும் நடிகர் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.


Click it and Unblock the Notifications











