சூர்யா - ஜோதிகா காதலுக்கு நான் தான் தூது போனேன்.. ரகசிய நிகழ்வை பகிர்ந்த ரமேஷ்கண்ணா!

சென்னை: தமிழ் சினிமாவில் நட்சத்திர கப்புலாக வலம் வந்து கொண்டுள்ளவர்கள் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா

பூவெல்லாம் கேட்டுப்பார்,உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், மாயாவி, ஜூன் ஆர்,சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட படங்களில் சூர்யா- ஜோதிகா ஜோடியாக நடித்துள்ளனர்.

 I too helped for Suriya-jyothika love says Ramesh Kanna

இந்நிலையில் சூர்யா மற்றும் ஜோதிகா காதலித்தபோது நடிகர் ரமேஷ் கண்ணா இருவருக்கு இடையிலும் தூது சென்றதாக ரகசிய நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார்

தமிழ் சினிமாவில் அனைவருக்கும் பிடித்த நட்சத்திர கப்புலாக இருப்பவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா. பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது,மாயாவி,காக்க காக்க,பேரழகன்,சில்லுனு ஒரு காதல், ஜூன் ஆர் உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்துள்ள சூர்யா மற்றும் ஜோதிகா தொடர்ந்து பல படங்களில் நடித்த பொழுது இருவருக்கும் ஏற்பட்ட காதல் பின் திருமணத்தில் முடிந்தது. இருவீட்டாரின் சம்மதத்துடன் 2006 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர் இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

 I too helped for Suriya-jyothika love says Ramesh Kanna

15 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்கள் மத்தியில் கியூட் கப்புலாக தனி இடத்தை பிடித்திருக்கும் சூர்யா மற்றும் ஜோதிகா நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் புதிய திரைப்படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர்.

பிதாமகன் மற்றும் நந்தா என சூர்யாவுக்கு அடுத்தடுத்து இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து திரைத்துறையில் அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றவர் இயக்குனர் பாலா. பிதாமகன் படத்திற்குப் பிறகு பாலா மற்றும் சூர்யா கூட்டணியில் எந்த ஒரு படமும் வெளியாகாமல் இருந்தது இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலா இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

 I too helped for Suriya-jyothika love says Ramesh Kanna

சூர்யா - ஜோதிகா காதலித்த போது இருவருக்குமிடையே நடிகர் ரமேஷ் கண்ணா தூது சென்றுள்ளார். இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றிலேயே பேசிய ரமேஷ் கண்ணா தெனாலி மற்றும் பிரண்ட்ஸ் என இரண்டு படங்களிலும் அப்போது நான் நடித்துக்கொண்டிருந்தேன். பிரண்ட்ஸ் படத்தில் சூர்யா நடித்துக் கொண்டிருந்தார்,தெனாலியில் ஜோதிகா கதாநாயகியாக நடித்தார். அப்போதே இருவரும் காதலித்தனர்

 I too helped for Suriya-jyothika love says Ramesh Kanna

பிரண்ட்ஸ் படப்பிடிப்பு உடுமலைப்பேட்டையிலும் தெனாலி படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது பிரண்ட்ஸ் படப்பிடிப்பை முடித்துவிட்டு தெனாலி படப்பிடிப்புக்கு செல்லும்போது சூர்யா ஜோதிகாவை கேட்டதாக சொல்ல சொல்வார்.. நானும் ஜோதிகாவை தெனாலி படப்பிடிப்பில் சந்தித்து சூர்யா கேட்டதாக சொல்வேன். அதேபோல தெனாலி படப்பிடிப்பிலிருந்து பிரண்ட்ஸ் படப்பிடிப்புக்கு செல்லும்போது ஜோதிகா சூர்யாவை கேட்டதாக சொல்லச் சொல்வார் இவ்வாறு சூர்யா-ஜோதிகா காதலுக்கு இருவருக்கும் இடையே தூது சென்ற ரகசிய நிகழ்வு குறித்து ரமேஷ் கண்ணா பேசியுள்ளார்.

 I too helped for Suriya-jyothika love says Ramesh Kanna

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X