பாலாவை புரிந்துகொள்ளவே எனக்கு இரண்டு வருடங்கள் ஆனது!

சென்னை : தரமான படங்களை இயக்கி இந்திய அளவில் முன்னணி இயக்குனராக உள்ளார் இயக்குனர் பாலா.

தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை தன்னுடைய படங்களுக்காக வென்று சர்வதேச அளவில் கவனிக்கப்பட்டு வருகிறது

சமீபத்தில் பாலா அவரது மனைவி முத்து மலரை விவாகரத்து செய்வதாக கூறிய நிலையில் பாலாவைப் பற்றி அவரது மனைவி பேசிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

திருப்புமுனை படமாக

திருப்புமுனை படமாக

சூர்யா, விக்ரம்,ஆர்யா, விஷால் என பல நடிகர்களின் திரை வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்திய சூப்பர்ஹிட் படங்களை இயக்கியவர் இயக்குனர் பாலா. நடிகர் விக்ரமுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய சேது என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். ரசிகர்களால் பெரிதாக கவனிக்கப்படாத சேது திரைப்படம் சில நாட்கள் கழித்தே கவனிக்கப்பட்டு பின் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. சேது விக்ரமிற்கு மட்டுமல்ல பாலாவுக்கும் மிகப்பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது. அதன்பிறகு இருவரும் அடுத்தடுத்த திரைப்படங்களில் தொடர்ந்து பணியாற்றினர்.

தேசிய விருது

தேசிய விருது

விக்ரமை தொடர்ந்து நடிகர் சூர்யாவையும் செதுக்கியவர் இயக்குனர் பாலா தான். நந்தாவில் நடிகர் சூர்யாவை வேறு விதமான கோணத்தில் காட்டியிருப்பார். இந்த படம் சூர்யாவுக்கு மிகப்பெரிய பிரேக்கிங் பாயின்ட்டாக அமைந்தது.

தொடர்ந்து பாலா இயக்கிய பிதாமகனில் சூர்யா மற்றும் விக்ரம் இணைந்து நடித்தனர். இந்த படமும் தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்று குவித்தது.

முதல் முறையாக ரீமேக்

முதல் முறையாக ரீமேக்

நான் கடவுள், அவன் இவன்,பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார் என தனது சொந்த கதைகளை மட்டும் எடுத்த பாலா முதல் முறையாக தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் வர்மா என்ற பெயரில் இயக்கினார்.

நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் இந்த படத்தில் ஹீரோவாக நடித்து அறிமுகமாக இருந்தார் . வர்மா அவுட்புட் பார்த்த தயாரிப்புக் குழு அந்த படம் தாங்கள் நினைப்பது போல வரவில்லை என படத்தை திரையரங்குகளில் வெளியிட மறுத்துவிட்டனர். வர்மாவிற்கு பிறகு நீண்ட படம் இயக்காமல் இருந்த பாலா இப்பொழுது சூர்யா ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் நடிகை ஜோதிகாவும் இணைந்து நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

 முத்துமலரை விவாகரத்து

முத்துமலரை விவாகரத்து

சமீபகாலமாகவே திரைப் பிரபலங்கள் பலரும் விவாகரத்து செய்வதாக அறிவித்து வரும் சூழலில் நடிகர் பாலாவும் மனைவி முத்துமலரை விவாகரத்து செய்வதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்தன. இந்த செய்தி ஒட்டுமொத்த தமிழ் திரைஉலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது உண்மையும் கூட . விவாகரத்துக்கான காரணம் சில ஆண்டுகளாகவே பாலாவிற்கு முத்து மலருக்கும் ஒத்து வராததால் பிரிந்து வாழ்ந்ததாகவும் இப்பொழுது விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சாக்ரிஃபைஸ் செய்தேன்

சாக்ரிஃபைஸ் செய்தேன்

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பாலாவை பற்றி பேசியிருந்த முத்து மலர் அதில் எனக்கு திருமணமாகி பத்து ஆண்டுகள் ஆகிறது அதில் சில ஆண்டுகள் அவர் வாயைத் திறந்து எதுவுமே சொல்ல மாட்டார். அதற்கு எனக்கு சில ஆண்டுகள் ஆனது. நானாகவே புரிந்துகொண்டு எல்லாருக்கும் பிடித்த மிகச் சிறந்த இயக்குனர் அவர் எனக்கு கிடைத்தது மிகப் பெரிய வரம் எனவே சில விஷயங்களை அவருக்காக சாக்ரிஃபைஸ் செய்துதான் ஆகவேண்டும். இப்பொழுது அவரை முழுமையாக புரிந்து கொண்டுள்ளேன். இவரிடம் எந்த நடிகர் வந்தாலும் அவரை மோல்ட் பண்ணி நடிக்க வைத்து விடுவார். அது தான் அவருடைய ஸ்பெஷாலிட்டி என பாலா குறித்து அவரது மனைவி முத்து மலர் சில ஆண்டுகளுக்கு முன்பு அளித்த பேட்டி தற்பொழுது வைரலாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X