பேபி மோனிகாவின் டார்லிங்ஸ் தல அஜீத் தளபதி விஜய்

சென்னை: வீரம் படத்தில் தல அஜீத் நடித்த போது அவருடன் போட்டோ எடுக்க மிகவும் ஆசை பட்டதாகவும், ஆனால் சிறுத்தை சிவா அஜித் கெட்டப்பில் இருக்கிறார் என்று சொல்லி போட்டோ எடுக்க விடவில்லை என்றும், பின்பு இதனை அறிந்த அஜீத் தனது கெட்டப்பை கலைத்து விட்டு வந்து அவருடன் போட்டோ எடுத்து கொண்டதாகவும் பேபி மோனிகா கூறியுள்ளார். பேபி மோனிகா ஒரு தனியார் சினிமா செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் ,தல மற்றும் தளபதியுடன் நடித்த அனுபவங்களைப் பற்றி பேசியுள்ளார்.

பேபி மோனிகா, இவர் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக விஜய் நடித்த பைரவா, அஜித் நடித்த வேதாளம், சமீபத்தில் வெளியான ராட்சசன் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.

I took a photo with Ajith-Baby Monika

ராட்சசன் படத்தில் நடித்ததை அடுத்து, தற்போது கைதி படத்திற்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேபி மோனிகாவை கார்த்தி மகளாக நடிக்க வைத்து இருக்கிறார். கைதியான அப்பாவுக்கும் மகளுக்கும் உள்ள பாசப் போராட்டம் படத்தின் ஒர் பாகம் என்பதனை நாம் கைதி முன்னோட்டத்திலே பார்த்திருப்போம்.

மோனிகா இப்போது பேட்டி கொடுக்கும் அளவிற்கு பிஸியான நடிகையாகிவிட்டார். வீரம் படத்தில் தல அஜீத்துடன் போட்டோ எடுக்க மிகவும் ஆசை பட்டதாகவும், ஆனால் சிறுத்தை சிவா அஜித் கெட்டப்பில் இருக்கிறார் என்று சொல்லி போட்டோ எடுக்க விடவில்லை என்றும், பின்பு இதனை அறிந்த அஜீத் தனது கெட்டப்பை கலைத்து விட்டு வந்து அவருடன் போட்டோ எடுத்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.

பேபி மோனிகா தளபதி விஜய் உடன் பைரவா படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி கேட்ட போது, விஜய்யை மோனிகா டார்லிங் அங்க்கிள் என்றே அழைப்பாராம். விஜய்யும் மோனிகாவும் சூட்டிங் சமயத்தில் நிறைய விளையாட்டுகள் விளையாடுவார்களாம். அதில் ஒரு விளையாட்டில் மோனிகா விஜயை தோற்கடித்தாராம்.

தளபதி விஜய் மற்றும் தல அஜீத் உடன் தான் நடித்த அனுபவங்களை மிக அழகாக மழலை ததும்பும் புன்சிரிப்புடன் கூறியிருந்தார். மேலும், கைதி படத்தில் கார்த்தி மிக அன்பாக பார்த்துக் கொண்டதாகவும், லோகேஷ் கனகராஜ் தனக்கு புரியும்படி கதையை தெளிவாக கூறுவார் அதனாலே எனக்கு நடிப்பதில் சிரமம் இல்லை என்றும் கூறியிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X