நான் கமல்ஹாசனை காப்பி அடிக்க ட்ரை பண்ணேன்.. நடிகர் காளிதாஸ் ஜெயராம்
சென்னை: தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பிரபலமாக உள்ள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் இப்பொழுது இளம் கதாநாயகனாக உள்ளார்
மீன் குழம்பும் மண் பானையும் என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோவாக அறிமுகமான காளிதாஸ் ஜெயராம் இப்பொழுது தமிழில் விக்ரம், நட்சத்திரம் நகர்கிறது உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்
இந்நிலையில் சமீபத்தில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் நடிகர் கமல்ஹாசனை காப்பி அடிக்க ட்ரை பண்ண தாக கூறியுள்ளார்.

காளிதாஸ் ஜெயராம்
தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் மிகப் பிரபலமான நடிகராக உள்ளவர் நடிகர் ஜெயராம். குறிப்பாக மலையாளத்தில் முன்னணி நடிகராக உள்ள இவர் தமிழிலும் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தமிழ் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாக உள்ள தமிழ் நாட்டை பூர்வீகமாக கொண்ட இவர் இப்போது மலையாள சினிமாவில் கலக்கிக் கொண்டுள்ளார்.ஜெயராமை தொடர்ந்து அவரது மகன் காளிதாஸ் ஜெயராம் தமிழ் மலையாளம் என இரு மொழிகளிலும் ஹீரோவாக இளம் கதாநாயகனாக வலம் வந்து கொண்டுள்ளார் மீன் குழம்பும் மண் வாசனையும் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக சினிமாவில் அறிமுகமானவர் அடுத்தடுத்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

நட்சத்திரம் நகர்கிறது
தொடர்ந்து கேங்ஸ்டர் படங்களை இயக்கி வந்த இயக்குனர் பா ரஞ்சித் சார் பாட்டா பரம்பரை கொடுத்த மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு அடுத்ததாக ஒரு காதல் கதையை இயக்க வேண்டும் என முடிவெடுத்தார் அந்த வகையில் இப்போது நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி வருகிறார் முழுக்க முழுக்க காதல் கதை களத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் ஜெயராம் ஹீரோவாக நடித்து கதாநாயகியாக சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்து அசத்திய துஷாரா விஜயன் நடித்து வருகிறார் இப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து தயாரிப்பு பணிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது

பேப்பர் ராக்கெட் என்ற வெப் சீரிஸை
வணக்கம் சென்னை காளி உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக உள்ள உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா அடுத்ததாக பேப்பர் ராக்கெட் என்ற வெப் சீரிஸை இயக்கி வருகிறார் இந்த வெப்சீரிஸ் காளிதாஸ் ஜெயராம் ஹீரோவாக நடிக்க கௌரி கிஷன் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

கமல்ஹாசனை காப்பி அடிக்க ட்ரை பண்ணேன்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகியுள்ள விக்ரம் படம் ஜூன் மூன்றாம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது இந்த படத்தில் நடிகர் காளிதாஸ் ஜெயராம் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் விருமாண்டி படத்தில் வரும் பஞ்சாயத்து காட்சியில் கமல் ஹாசனின் நடிப்பை பார்த்து அவரை மாதிரி நடிக்க ட்ரை பண்ணினேன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











