எனக்கும் அப்போது தற்கொலை எண்ணம் இருந்தது.. இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அதிர்ச்சி தகவல்!

By

சென்னை: எனக்கும் தற்கொலை எண்ணம் வந்தது என்று இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள லாக்டவுனால் கடந்த நூறு நாட்களாக எந்த பணிகளும் நடக்கவில்லை.

சினிமா படப்பிடிப்புகள், தியேட்டர்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டதால், சினிமா தொடர்பான வேலைகளும் நடக்கவில்லை.

யுவன் சங்கர் ராஜா

யுவன் சங்கர் ராஜா

இந்நிலையில் சினிமா பிரபலங்கள் சமூக வலைதளங்களில் தங்கள் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். அவர்களின் இப்போதைய ஒரே பொழுதுபோக்கு அதுவாகத்தான் இருக்கிறது. இந்நிலைல் சிலர் ரசிகர்களின் கேள்விகளுக்கு தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் பதிலளித்து வருகின்றனர். இந்நிலையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் ரசிகர்களின் கேள்விகளுக்கு இன்ஸ்டாகிராமில் பதிலளித்தார்.

Recommended Video

உண்மை சம்பவத்தை படமாக்கும் ராம் கோபால் வர்மா | Pranav இழப்பு
அப்துல் காலிக்

அப்துல் காலிக்

கடந்த 2014-ம் ஆண்டு இஸ்லாம் மதத்தைத் தழுவிய இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தனது பெயரை அப்துல் காலிக் என்று மாற்றிக் கொண்டார். பின்னர் ஆடை வடிவமைப்பாளர் ஷாஃப்ரூன் நிஷா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. தனது பர்சனல் விஷயங்கள் உட்பட பல்வேறு விஷயங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

வலிமை பின்னணி இசை

வலிமை பின்னணி இசை

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் வலிமை படத்தின் பிஜிஎம் பற்றிய ரசிகர்கள் கேட்டனர். அஜித்தின் பில்லா, மங்காத்தா படங்களில் யுவன் சங்கர் ராஜாவின் பிஜிஎம் ரசிகர்களை கவர்ந்தது என்பதால் வலிமையின் பிஜிஎம் -மை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதற்குப் பதிலளித்த அவர், வலிமை படத்தின் பின்னணி இசைக்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. கொரோனாவால் தாமதமாகி வருகிறது என்று கூறியுள்ளார்.

தற்கொலை எண்ணம்

இன்னொரு ரசிகர், உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மோசமான அச்சம் என்ன, அதில் இருந்து எப்படி மீண்டீர்கள்? என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்துள்ள யுவன், எனக்கும் அதிகமாக தற்கொலை எண்ணம் வந்தது. ஆனால், அவற்றைக் கடக்க எனக்கு இஸ்லாம் உதவியது என்று தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் பற்றிய ரசிகர் ஒருவரின் கேள்விக்கு 'அவர் எனக்கு பலவழிகளில் ஊக்கமளித்தவர் என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X