100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தாலி கட்டியிருக்கிறேன்: கமல் ஹாஸனின் நண்பேன்டா பேட்டி
திருவனந்தபுரம்: 100க்கும் மேற்பட்ட நடிகைகளுக்கு தாலி கட்டியுள்ளதாக நடிகர் ஜெயராம் தெரிவித்துள்ளார்.
அப்பா படத்தின் மலையாள ரீமேக்கான ஆகாச மிட்டாயீ படத்தில் சமுத்திரக்கனி கதாபாத்திரத்தில் ஜெயராம் நடித்துள்ளார். மலையாளத்தில் படத்தை இயக்கியதுடன் நிறுத்திக் கொண்டார் சமுத்திரக்கனி.
படத்தை விளம்பரம் செய்ய ஜெயராம் பாடகி ரிமி டாமி நடத்தும் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

நடிகைகள்
நீங்கள் நடித்த நடிகைகளில் யார் மிகவும் அழகு என்று நினைக்கிறீர்கள் என்று ரிமி ஜெயராமிடம் கேட்டார். அதற்கு அவர் அளித்த பதில் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

தாலி
நான் நூற்றுக்கும் மேற்பட்ட நடிகைகளுடன் நடித்துள்ளேன். அதில் கிட்டத்தட்ட அனைவருடனும் தாலி கட்டும் காட்சிகளில் நடித்திருக்கிறேன். அதில் நீங்களும் அடக்கம் என்று ரிமியிடம் தெரிவித்தார் ஜெயராம்.

மனைவி
அழகு ஒவ்வொருவருக்கும் மாறுபடும். மிக அழகான பெண்ணை என் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டேன். அவர் தான் என் மனைவி பார்வதி என்றார் ஜெயராம்.

திருமணம்
நான் 1992ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7ம் தேதி பார்வதியை திருமணம் செய்து கொண்டேன். அப்போது அவர் தனது சினிமா கெரியரில் உச்சத்தில் இருந்தார் என்று ஜெயராம் கூறினார்.

வீடு
குடும்பம், குழந்தைகளை பார்த்துக் கொண்டு வீட்டோடு இருக்க விரும்புவதாகவும், தொடர்ந்து நடிக்க விரும்பவில்லை என்றும் பார்வதி கூறினார். அவரது முடிவை நான் ஏற்றுக் கொண்டேன் என்றார் ஜெயராம்.


Click it and Unblock the Notifications











