Just In
- 1 min ago
தோத்துட்டேன் மச்சான்.. பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு போனில் உரையாடிய சோமசேகர்.. வைரலாகும் வீடியோ!
- 13 min ago
பேண்டை கழட்டி 'அதை' காட்டினார்.. பிரபல இயக்குநர் மீது யுனிவர்சிட்டி பட நடிகை பகீர் புகார்!
- 1 hr ago
பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரிக்கு வாழ்த்து சொன்ன சினிமா பிரபலங்கள்.. பதிலுக்கு நன்றி சொன்ன ஆரி!
- 1 hr ago
மீண்டும் இணைந்த கவின் லாஸ்லியா.. பிக்பாஸ் சக்சஸ் பார்ட்டியில் சந்திப்பு.. தீயாய் பரவும் போட்டோஸ்!
Don't Miss!
- Lifestyle
இந்த டீ நீங்க தூங்கும்போதுகூட உங்க கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க உதவுமாம்...!
- Sports
டெஸ்ட் தரவரிசை.... 4வது இடத்துக்கு இறங்கிய கேப்டன்... முதல் 50 இடங்களில் 8 இந்திய வீரர்கள்!
- News
ஸ்ரீபெரும்புதூர் ஆதி கேசவ பெருமாளை தரிசித்த கையோடு ஸ்டாலினுக்கு எதிராக அனலை கக்கிய முதல்வர்
- Education
தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு!
- Automobiles
வால்வோ எஸ்60 சொகுசு காருக்கு ஆன்லைனில் புக்கிங் துவங்கியது... முதலில் வருவோருக்கு சகாய விலை!
- Finance
தங்கம், ரியல் எஸ்டேட் முதலீடுகள்.. நீங்கள் எவ்வளவு வரி செலுத்துகிறீர்கள் தெரியுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆமா, ரூ.400 கோடி கேட்டிருக்கேன். ஏன்னா, விஷால் சேட்டிலைட்ல இருந்து குதிக்கிறார்.. மிஷ்கின் கிண்டல்!
சென்னை: விஷாலிடம், தான் 400 கோடி ரூபாய் வேண்டும் என்று கேட்டதாக இயக்குனர் மிஷ்கின் கிண்டலாகத் தெரிவித்துள்ளார்.
மிஷகின் இயக்கத்தில் விஷால் நடித்தப் படம், துப்பறிவாளன். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது உருவாகிறது.
தனது விஷால் பிலிம்பேக்டரி சார்பில் நடிகர் விஷால் தயாரிக்கிறார். ஹீரோயினாக ஆஷ்யா நடிக்கிறார். மற்றும் பிரசன்னா, ரகுமான், கவுதமி, நாசர் உட்பட பலர் நடிக்கின்றனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இளையராஜா இசையமைக்கிறார்.
டூயட்தான் பாடுவேன்.. அப்படியெல்லாம் நடிக்க முடியாது.. டாப் ஹீரோவுக்காக அடம்பிடிக்கும் நம்பர் நடிகை!

லண்டனில் ஷூட்டிங்
இதன் ஷூட்டிங் லண்டனில் நடந்து வந்தது. ஒரு மாதத்துக்கும் மேல் அங்கு நடந்த படப்பிடிப்பில் இயக்குனர் மிஷ்கினுக்கும் விஷாலுக்கும் பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. படத்தில் நடித்தவர்கள் சமாதானம் செய்து வைத்ததாகவும் கூறப்பட்டது. பின்னர் சில நாட்கள் அங்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு டிசம்பர் மாதம் படக்குழு சென்னைத் திரும்பியது.

மிஷ்கின் நீக்கம்
அடுத்த ஷெட்யூலுக்கு ரெடியாகிக் கொண்டிருந்த நிலையில் படத்தில் இருந்து திடீரென மிஷ்கின் நீக்கப்பட்டுள்ளார். இந்தப் படத்தின் ஷூட்டிங்கிற்கு மிஷ்கின் முறையாக திட்டமிடாததால், அதிக நஷ்டத்தை சந்தித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அடுத்த ஷெட்யூலுக்கு பட்ஜெட்டை விட இன்னும் ரூ.40 கோடி வேண்டும் என்று மிஷ்கின் கேட்டதாகக் கூறப்பட்டது.

விஷால் அதிர்ச்சி
இதனால் இருவருக்கும் பிரச்னை என்றும் கோபமான மிஷ்கின், படத்தில் இருந்து விலகிக் கொள்கிறேன் என்று தெரிவித்தார் என்றும் கூறப்பட்டது. பாதி படம் முடிந்த நிலையில் மிஷ்கின் இப்படி கேட்டதால் விஷால் அதிர்ச்சி அடைந்தார் என்றும் 'எனக்கு திடீரென்று ஏதும் ஆகிவிட்டால், என்ன பண்ணுவீங்க? அதை போல இப்பவும் பண்ணுங்க?' என்று மிஷ்கின் சொன்னதாகவும் தகவல்கள் வெளியாயின. இதையடுத்து படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டாராம்.

400 கோடி கேட்டேன்
இந்நிலையில் இந்த விவகாரம் பற்றி கேட்டபோது, கிண்டலாகப் பதிலளித்துள்ள மிஷ்கின், 'இல்ல, நான் 40 கோடி கேட்கலை. 400 கோடி கேட்டேன். பாதி படத்தை 100 கோடியில் முடிச்சிருக்கேன். அடுத்த பாதிக்கு 100 கோடி கேட்டிருக்கேன். கிளைமாக்ஸுக்கு மட்டும் நூறு கோடி கேட்டிருக்கேன். ஏன்னா, விஷால் சேட்டிலைட்ல இருந்து குதிக்கிற மாதிரி காட்சி. ஆமா.. நான் 400 கோடி கேட்டிருக்கேன் என்று தெரிவித்துள்ளார்.