என் கடமையைச் செஞ்சுட்டேன்.. ஆனால் மாற்றம்.. சிவகார்த்திகேயன் நச் பேட்டி
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தனது ஜன நாயக கடமையை செய்து முடித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அவர் கூறுகையில், " பலரும் எதிர்பார்க்கும் தேர்தலாக இந்த தேர்தல் மாறி உள்ளது. இந்த தேர்தலில் தான் சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகம் உள்ள தேர்தலாக உள்ளது. இதன் முடிவுகள் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்வதற்கு நானும் ஆர்வமாகத்தான் இருக்கிறேன். மாற்றம் வருமா என்பதை மக்கள் அனைவரும் சேர்ந்துதான் சொல்ல வேண்டும், நான் ஒருவன் மட்டும் சொன்னால் போதாது. என் கடமையை நான் சரியாக செய்துள்ளேன்" என்று பேசினார். இவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

அதேபோல்,வாக்களித்து விட்டு வந்த நடிகர் ஜீவா செய்தியாளர்களைச் சந்திக்கையில், " வாக்களிப்பது குறித்து அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இது அனைவரது கடமை மற்றும் உரிமை. நல்ல குடிமகனுக்கு அடையாளமாக நான் எனது வாக்கினைச் செலுத்தி உள்ளேன். இளைஞர்கள் அவர்களின் சௌகரியமான சூழலில் இருந்து வெளிவந்து, அதிகப்படியாக வாக்கு செலுத்தினால், நமது மாநிலத்தின் நிலை மிகவும் நன்றாக இருக்கும்.
இந்த தேர்தல் மட்டுமல்ல, அனைத்து தேர்தல்களும் மிகவும் முக்கியமானது தான். மாற்றம் என்பது குறித்து நாம் இப்போது பேச முடியாது, மக்கள் அனைவரும் இணைந்து என்ன முடிவெடுக்கிறார்கள் என்பது குறித்து, மே 4 அன்று தான் தெரியவரும். எனக்கென்று தனி கோரிக்கை எல்லாம் எதுவும் இல்லை, அதுபோல நான் யோசிக்கவும் இல்லை. மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும், அவர்களுடன் இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
விஜய் குறித்த கேள்வி: அதேபோல் இலவசங்கள் குறித்தும் நடிகர் விஜய் குறித்தும் பத்திரிகையாளர்கள் தரப்பில் இருந்து கேள்வி எழுப்பப்பட்டது. அந்த இரண்டு கேள்விகளுக்குமே, " நோ கமண்ட்ஸ்" என்று பதில் அளித்தார். இவரது இந்த பதில் பேசு பொருளாக மாறியது மட்டும் இல்லாமல், விஜய் ரசிகர்கள் தரப்பில் கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications