பல தப்பு பண்ணிட்டேன், இப்போ நினைத்தால் கஷ்டமா இருக்கு: சன்னி லியோன் உருக்கம்

By Siva

Recommended Video

'கரேன்ஜிட் டு சன்னி' : சன்னி லியோனன் படம்!- வீடியோ

மும்பை: தன் வாழ்வில் பல தவறுகள் செய்துள்ளதாக நடிகை சன்னி லியோன் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன் தற்போது பாலிவுட்டில் செட்டில் ஆகிவிட்டார். அவரின் வாழ்க்கை வரலாறு கரன்ஜித் கவுர்: தி அன்டோல்ட் ஸ்டோரி என்ற பெயரில் வெப்சீரீஸாக எடுக்கப்பட்டுள்ளது.

10 எபிசோடுகள் கொண்ட அந்த சீரீஸில் நடித்தது குறித்து பேட்டி அளித்துள்ளார் சன்னி லியோன். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,

கஷ்டம்

கஷ்டம்

என் அம்மா 2008ம் ஆண்டு இறந்தார். புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அப்பா கடந்த 2010ம் ஆண்டு உயிர் இழந்தார். வெப் சீரீஸில் என் பெற்றோராக நடித்தவர்கள் உண்மையான பெற்றோர் இல்லை என்று எனக்கு தெரியும். இருப்பினும் அவர்கள் இறந்து போவது போன்ற காட்சியை பார்க்க ரொம்ப கஷ்டமாக இருந்தது.

அப்பா

அப்பா

சவப்பெட்டியில் ரீல் அம்மா, ரீல் அப்பா புற்றுநோயால் அவதிப்படுவது போன்று நடித்ததையே பார்க்க முடியவில்லை. இந்த காட்சி எல்லாம் வரும் என்று எனக்கு தெரியும். ஆனால் என்னால் தாங்கிக் கொள்ள முடியும் என்று நினைத்தேன், முடியவில்லை. என்னை நல்லவள் போன்று காட்ட இந்த சீரீஸை எடுக்கவில்லை. உண்மையை உலகிற்கு சொல்லியுள்ளோம்.

நடிகை

நடிகை

பணத்தின் மதிப்பை என் பெற்றோர் எனக்கு சொல்லிக் கொடுத்து வளர்த்துள்ளனர். அதனால் நான் முதலில் தொழில் அதிபர் அதன் பிறகே நடிகை. தற்போது மூன்று குழந்தைகளுக்கு நான் தாய். அதனால் பணம் நிச்சயம் எனக்கு பிடித்த ஒன்று. நான் என் வாழ்வில் பல தவறுகளை செய்துள்ளேன். அது தற்போது தான் புரிகிறது.

முடிவு

முடிவு

என் வாழ்க்கையில் நான் எடுத்த முடிவுகள் எனக்கு தெரியும். ஆனால் நான் எடுத்த முடிவுகள் என் குடும்பம் மற்றும் எனக்கு நெருக்கமானவர்களை எப்படி பாதித்தது என்பது தெரியவில்லை. அது தற்போது புரியும்போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. நம்ம பிலிம்ஸை சேர்ந்த ஷரீன் மற்றும் என் கணவர் டேனியல் வெபர் தான் என்னை பற்றிய வெப் சீரீஸ் எடுக்கும் ஐடியாவை கொடுத்தனர் என்கிறார் சன்னி லியோன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X